நன்யாங் பல்கலையில் ஓட்டுநரில்லா பேருந்துகள்

நன்யாங் பல்கலையில் ஓட்டுநரில்லா பேருந்துகள்

1 mins read

நன்யாங் தொழில்நுட்பப் பல்க லைக்கழக (என்டியு) மாணவர்கள் இனி தங்கள் பகல் உணவு இடை வேளைக்கும் வகுப்புகளுக்கும் ஓட்டுநரில்லா இணைப்புப் பேருந்து களைப் பயன்படுத்தலாம். இவ்வாண்டின் நான்காம் காலாண்டுக்குள் ஒரு தடவைக்கு 24 பேரை ஏற்றிச் செல்லக் கூடிய இத்தகைய வாகனம் மணிக்கு 500 மீட்டர் வேகத்தில் பயணம் செய்து, மாணவர் அரங்குகளை பிரதான கல்வித்துறைப் பகுதிகளு டன் இணைக்கும். இப்படி அது ஒரு நாளைக்கு 300 பயணிகளுக்கு சேவை செய் யும். இந்தப் பாதையில் அது பாத சாரிகள், இதர வாகன போக்குவ ரத்து போன்ற இடர்பாடுகளையும் சந்திக்க நேரிடலாம்.

புதிய பேருந்துகளை அறிமுகம் செய்வது தொடர்பில், எஸ்எம்ஆர்டி யின் செயலாக்கம், பழுதுபார்ப்புப் பிரிவான 'எஸ்எம்ஆர்டி சர்விசஸ்' உடனும் நெதர்லாந்தைச் சேர்ந்த '2கெட்தேர்' நிறுவனத்துடனும் என்டியு நேற்று ஒப்பந்தம் செய்தது. கடந்தாண்டு நவம்பர் மாதத்தி லிருந்து அந்தப் பேருந்து பல்க லைக்கழக வளாகத்தில் சோதிக்கப் பட்டது. இரண்டு மாணவர் மண்டபங்க ளுக்கு இடையிலுள்ள 350 மீட்டர் நீளப்பாதையில் பேருந்து சென்றது. பேருந்து இதுவரையில் 4,000 பய ணிகளைப் பத்திரமாகக் கொண்டு சென்று அவரவர் போக வேண்டிய இடங்களில் வெற்றிகரமாகச் சேர்த்தது.