பயன்பாட்டுக் காலத்தை இரட்டிப்பாக்கும் புதிய உணவு பதனீட்டு ஆலை

பயன்பாட்டுக் காலத்தை இரட்டிப்பாக்கும் புதிய உணவு பதனீட்டு ஆலை

2 mins read
a87dfbee-6ba0-4771-9e38-14e435b5b2ea
-

குளிர் நீர் நிரப்பப்பட்ட சிறப்பு அழுத்தப் பகுதிக்கு பதப்படுத்தப் பட்ட உணவை மாற்றிவிடும் உயர் அழுத்த பதனீட்டு ஆலை நேற்று அதிகாரபூர்வமாகத் திறக்கப் பட்டுள்ளது. உணவின் பயன்பாட்டு காலத்தை இரட்டிப்பாக்கும் வச தியை உணவு தயாரிப்பாளர்கள் பகிர்ந்துகொள்ளும் வண்ணம் அந்தப் புதிய ஆலை ஜூரோங்கில் திறக்கப்பட்டுள்ளது. அந்த ஆலையில் 15 நிமிடங் கள் பதப்படுத்தப்பட்ட உணவு அனுப்பப்படுவதால் குறைந்தது இரு மடங்கு அதன் பயன்பாட்டு காலம் நீட்டிக்கப்படுவது மட்டு மல்லாமல் உணவு பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படுகிறது. ரசா யனத்தைக் கொண்டோ வெப்பத் தைக் கொண்டோ இந்த முறை செயல் படாததால் உணவின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படுகிறது.

இது போன்ற வசதி ஏற்கெ னவே இரண்டு நிறுவனங்களில் இருந்தாலும் அனைத்து உணவு உற்பத்தியாளர்களும் பயன்படுத் தும் பகிர்வு ஆலை திறக்கப்படுவது இதுவே முதன்முறை. சிங்கப்பூர் பலதுறை தொழிற் கல்லூரியின் உணவு புத்தாக்க வளமையம், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் ஆகியவற்றின் உதவியு டன் வேர்ஹவுஸ் லாஜிஸ்டிக்ஸ் நெட் ஏ‌ஷியா நிறுவனம் இந்த ஆலையைத் திறந்துள்ளது. வெப்பமான சூழலில் கெட்டுப் போகும் சத்துக்கள் இந்தச் செயல் முறையால் தக்கவைத்துக் கொள் ளப்படும். மேலும் பதப்படுத்துவ தற்கு ரசாயன பொருட்கள் பயன் படுத்தப்படாததால் உற்பத்தி செய் யப்படும் உணவு ஆரோக்கியமான தாக இருக்கும் என்று தெரிவிக்கப் பட்டது.

பயன்பாட்டுக் காலம் நீட்டிக்கப் படுவதால் தயாரிக்கப்படும் உணவு ஏற்றுமதிக்கு உகந்ததாக வும் ஆகிறது என்று வர்த்தக, தொழில் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன் கூறியுள்ளார். நிறுவனங்கள் இந்த ஆலை வசதிகளைப் பயன்படுத்துவதற்கு ஏற்றவாறு கட்டணங்கள் செலுத்த வேண்டும். ஆசியாவின் முன்னணி சத்து ணவு மையமாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உணவு உற்பத்தித் துறை உரு மாற்றுத் திட்டத்தின் பகுதியாக இந்த பொது-தனியார் துறை பங்காளித்துவம் விளங்குகிறது.

ஜூரோங்கில் உயர் அழுத்த உணவு பதனீட்டு ஆலை நேற்று அதிகாரபூர்வமாக திறக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்