பிரதமர் லீ: நற்பயனை முன்னெடுப்போம்

பிரதமர் லீ: நற்பயனை முன்னெடுப்போம்

3 mins read

காமன்வெல்த் அமைப்பில் அங்கம் வகிப்பதால் பயனடைந்திருக்கும் சிங்கப்பூர், அமைப்பிலுள்ள சக நாடுகளுடன் தனது வளர்ச்சி அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு, தான் அடைந்த நற்பயனை முன் எடுத்துச் செல்லும் எனப் பிரதமர் லீ சியன் லூங் கூறியிருக்கிறார். ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காமன்வெல்த் தலை வர்கள் கூட்டத்திற்கு முன்பாக திரு லீ இந்த உறுதிமொழியை வெளியிட்டார்.

லண்டனில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் அவர் இவ்வாரம் கலந்துகொள்கிறார். சிங்கப்பூர் சுதந்திரம் பெற்று இரு மாதங்களுக்குப் பிறகு 1965 அக்டோபர் மாதம் காமன்வெல்த் அமைப்பில் சேர்ந்தது. அப்போது, கடுமையான சமூக, பொருளியல் பிரச்சினைகளை சிங்கப்பூர் எதிர் நோக்கியதாக இவ்வாண்டுக்கான காமன்வெல்த் தலைவர்கள் கூட்ட அறிக்கையில் அவர் எழுதி இருக்கிறார். "நமது உயிர்வாழ்வுக்கு எதிரான சூழ்நிலைகள் நிலவிய போதிலும் நாம் அவற்றைச் சமா ளித்துவிட்டோம். நமக்கு உதவி தேவைப்பட்டபோது உதவ முன் வந்த நண்பர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி. அவர்களில் பலரும் காமன்வெல்த் அமைப்பின் அங்கத்தினர்," என்று திரு லீ எழுதியிருந்தார்.

இப்போது, தொழில்நுட்ப உத வித் திட்டங்களின்மூலம் காமன் வெல்த் அமைப்பிலுள்ள மற்ற நாடுகளுக்கு உதவ முடிவதில் சிங்கப்பூர் மகிழ்ச்சி அடைவதாக வும் அவர் குறிப்பிட்டார். லண்டனில் நடைபெறும் காமன் வெல்த் தலைவர்கள் கூட்டத்தில் 53 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்குபெறுகின்றனர்.

வியாழக்கிழமை (ஏப்ரல் 19) தொடங்கி வெள்ளிக்கிழமை வரை கூட்டம் நடைபெறும். காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்திற்கும் சிங்கப்பூர் இந்த ஆண்டு தலைமை தாங்கும் ஆசியானுக்கும் இடையில் ஒற்று மைகள் இருப்பதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.

பயங்கரவாதம், இணையக் குற்றச்செயல்கள், பருவநிலை மாற்றம் போன்ற மிரட்டல்களுக்கு எதிரான மீள்திறனை வலுப்படுத்தவும் ஆசி யான் நாடுகள் புத்தாக்கத்தையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்த உதவவும் சக ஆசியான் நாடு களோடும் பங்காளர்களோடும் சிங்கப்பூர் சேர்ந்து செயல்படுவதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாண்டின் காமன்வெல்த் கூட்டத்தின் முக்கிய கருப்பொருட் களான பாதுகாப்பு, செழிப்பு, நியா யம், நீடித்த நிலைத்தன்மை ஆகிய வற்றை இவை ஒத்திருப்பதாக அவர் கூறினார்.

"காமன்வெல்த் அமைப்புக்கும் ஆசியானுக்கும் இடையில் பொது வானவை நிறைய உள்ளன. சகிப் புத்தன்மை, மரியாதை, புரிந்து ணர்வு போன்ற அடிப்படை பண்பு நெறிகளை இரு அமைப்புகளுமே கடைப்பிடிக்கின்றன. சீரிய ஆளு மையையும் நீடித்து நிலைக்கத்தக்க நடைமுறைகளையும் மேம்படுத்துவ தன்மூலம் குடிமக்களின் வாழ்க் கையைச் சீர்தூக்க இரு அமைப்பு களும் முயற்சி எடுக்கின்றன," என்றார் திரு லீ. "ஒவ்வொரு நாடும் செழிப்ப டைய வழிகோலும் திறந்த, விதி முறைகளின் அடிப்படையிலான பலதரப்பு செயல்முறையை இரு அமைப்புகளும் கட்டிக்காக்கின் றன. இதன் காரணமாக, நமக் காகவும் எதிர்காலத் தலை முறைகளுக்காகவும் சீரிய உலகை ஒன்றுசேர்ந்து உருவாக்க நாம் நிறைய செய்ய முடியும்."

சக காமன்வெல்த் நாடுகளின் அதிகாரிகளுக்காக, பேரிடர் நிர் வாகம், தேசிய வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புகள் மேம்பாடு, பொதுத் துறை நிர்வாகம் போன்ற வற்றில் ஆற்றலை வளர்க்கும் பயிற்சிகளை நடத்துவதன்மூலம் சிங்கப்பூர் அதன் அணுகுமுறை களையும் திறனையும் பகிர்ந்து கொள்வதாகத் திரு லீ தெரி வித்தார்.

"அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு, யோசனைகளைப் பரி மாறிக் கொள்வதன்மூலம் காமன் வெல்த் நாடுகளின் எதிர்காலத் தலைமுறையினர் தொடர்ந்து நன்மை அடைவார்கள் என நம்புகிறோம்," என்றார் திரு லீ.