சட்ட நிறுவனம் ஒன்றின் இயக்குநர், தனது வாடிக்கையாளர் ஸாங் மின் வாங் சட்டவிரோதமான முறையில் திரட்டப்பட்ட பணத்தைக் கொண்டு 'செந்தோசா கோவ்' சொகுசு வீடு வாங்க முற்பட்டதை அதிகாரிகளிடம் கூறத் தவறியதற்காக அவருக்கு $10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை தொடர்பில் நிறுவன இயக்குநர் 56 வயது காங் பீ லேங் புகார் செய்யத் தவறியதை நீதிமன்றத்தில் நேற்று ஒப்புக்கொண்டார். கடன் கொடுக்கும் இணையத்தளமான ஈசுபாவ் தொடர்பிலான மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் ஸாங் சீனாவில் கைது செய்யப்பட்டார்.
சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனையை மறைத்த முதலாளிக்கு அபராதம்
1 mins read

