ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் அரசாங்கத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் லீ சியன் லூங் லண்டன் செல்கிறார். இக்கூட்டம் நாளையும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை யும் நடைபெறும். பிரதான கூட்டத்தைத் தவிர, பிரதமர் லீ இதர கூட்டத்தில் கலந்துகொள்ளும் இதர நாட்டுத் தலைவர் களுடன் பேச்சு நடத்துவார்.
'பொதுவான எதிர்காலத்தை நோக்கி' எனும் கருப்பொரு ளைக் கொண்ட இவ்வாண்டு கூட்டத்தில் 53 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். கூட்டத்தில், வலு விழந்த உலக வர்த்தகம், முதலீடுகள் போன்ற உலகளாவிய, மற்றும் வட்டார விவகாரங்கள் குறித்தும் சிறிய மற்றும் அபா யத்துக்குள்ளாகும் நாடுகள், காமன்வெல்த் அமைப்பின் புதிய மேம்பாடுகள் குறித்தும் தலைவர்கள் விவாதிப்பார்கள்.
பிரதமருடன் திருமதி லீ, வெளியுறவு அமைச்சர் விவி யன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலகம், தொடர்பு, தகவல் அமைச்சு, வெளியுறவு அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் லண்டன் செல்கின்றனர். பிரதமர் நாட்டில் இல்லாத சமயத்தில் வர்த்தக தொழில் அமைச்சர் (வர்த்தகம்) லிம் ஹங் கியாங் தற்காலிக பிரதமராகப் பொறுப்பு வகிப்பார்.

