லிம் சுவீ சேக்குப் பதிலாக ஜோசஃபின் டியோ மனிதவள அமைச்சராகலாம்

1 mins read

அமைச்சரவை மாற்றம் விரைவில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் வேளையில், மனிதவள அமைச்சர் லிம் சுவீ சேக்குப் பதிலாக தற்போது மனிதவள இரண்டாம் அமைச்சராக உள்ள ஜோசஃபின் டியோ அந்த அமைச்சின் முழு அமைச்சராக அறிவிக்கப்பட லாம் என்ற சாத்தியம் அதிகரித்து வருகிறது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புதிய அமைச்சர வையில் அவருக்குக் கிடைக்கக்கூடிய முழுப் பொறுப்பு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மனிதவள அமைச்சு விவகா ரத்தில் நான் பல்லாண்டுகளாகப் பணியாற்றியுள்ளேன். தொழிலாளர் இயக்கத்தில் நான் பல காலம் இருந்ததே அதற்குக் காரணம்," என்றார். திருவாட்டி டியோ என்டியுசியின் உதவி தலைமைச் செயலாளராக 2007 முதல் 2011 வரை பணியாற்றியுள்ளார். திரு லிம் ஒரு நல்ல அமைச்சர். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டுள்ளேன்," என்று திருவாட்டி டியோ சொன்னார்.