யூனோஸ் கார் நிறுத்தும் இடத்தில் பின்னால் நகர்ந்துகொண்டிருந்த டாக்சி, 75 வயது முதியவரை மோதியதைத் தொடர்ந்து டாக்சி ஓட்டுநர் பணிநீக்கம் செய்யப்பட் டுள்ளார். யூனோஸ் கிரசெண்ட் புளோக் 7ல் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்த அந்தச் சம்பவம் காணொளி ஒன்றில் பதிவானது. முதியவர் ஒருவர் இரண்டு கைகளில் பைகளுடன் கார் நிறுத்தும் இடத்தைத் தாண்டிச் சென்றுகொண்டிருந்தார். திடீரென, கம்ஃபர்ட் டாக்சி ஒன்று பின்னோக்கி நகர்ந்து அந்த ஆடவரை மோதியது. அந்த முதியவர் பின்னோக்கி விழுந்தார்.
கீழே தள்ளப்பட்ட முதியவருக்கு ஓட்டுநர் உதவ முற்பட்டதாகக் மற்றொரு காரில் இருந்த கண் காணிப்புக் கருவியின் காணொ ளியில் தெரிந்தது. நடந்த சம்பவம் பற்றிய காலை 9 மணி வாக்கில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகப் போலிஸார் தெரிவித்துள்ளனர். காயம்பட்ட முதியவர் சுய நினைவுடன் சாங்கி மருத்துவம னைக்குக் கொண்டு செல்லப்பட்ட தாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற் காப்புப் படையினர் தெரிவித்தனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்த கம்ஃபர்ட்டெல்குரோ குழு மத்தின் வர்த்தகத் தொடர்பு அதிகாரி டேமி டான், "இது ஒரு மோசமான விபத்து. "ஓட்டுநர் இன்னும் அதிக அக் கறையுடனும் கவனத்துடனும் டாக் சியை ஓட்டியிருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கலாம்," என்று கூறினார். டாக்சி ஓட்டுநரின் வேலை ஒப் பந்தத்தை நிறுவனம் ரத்து செய் துள்ளது என்றும் நிறுவனம் போலிஸ் விசாரணையில் ஒத்து ழைக்கும் என்றும் அவர் சொன் னார். பாதிக்கப்பட்ட ஆடவர் மருத்து வமனையிலிருந்து வீடு திரும்பி யதாகவும் திருவாட்டி டேமி தெரிவித்தார்.
"அவரை நாங்கள் தொடர்பு கொள்ள முயல்கிறோம். அவருக்கு இயன்றவரை உதவி செய்வோம்," என்று திருவாட்டி டேமி கூறினார். விபத்து குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.
கார் நிறுத்தத்தில் இரண்டு பைகளைக் கைகளில் ஏந்தி முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கையில் பின்னோக்கி வந்த டாக்சி அவரை மோதுவதை மற்றொரு காரின் காணொளிப்படம் காட்டுகிறது. படம்: FACEBOOK/ SG ROAD VIGILANTE

