ப. பாலசுப்பிரமணியம்
சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழில் சபையில் (சிக்கி) நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் புதிய இயக்குநர் சபை தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளது. அச்சபையின் புதிய தலைவ ராக மாடர்ன் மாண்டிசோரி இன் டர்நேஷனல் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் டி.சந்துரு (படம்) பொறுப்பு வகிக்க இருக்கிறார். தேர்தலுக்கு முன்னதாக இவர் வர்த்தக, தொழில் சபை யின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்தவர்.
வர்த்தக, தொழில் சபையின் புதிய துணைத் தலைவர்களாக டிரான்ஸ்வர்லட் ஜில்சி (சிங்கப்பூர்) நிறுவனத்தின் திரு மகேஷ் சிவ சுவாமியும் யூனிவர்சல் சக்சஸ் (சிங்கப்பூர்) நிறுவனத்தின் திரு பிரசூன் முகர்ஜியும் தேர்வு பெற் றுள்ளனர். பொருளாளராக மனோ இக்வஸ்ட்ரியன் சர்வீசஸ் நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் திரு மனோ கரன் சக்ர பாணி தேர்வு பெற்றார்.
இவர்களைத் தவிர, 13 பேர் சபையின் இயக்குநர்களாகப் பதவி வகிப்பார்கள். இவர்களின் பதவிக் காலம் உடனடியாக நடப்புக்கு வருகிறது என்றும் அது 2020ஆம் ஆண்டு வரையில் நீடிக்கும் என்றும் சிங்கப்பூர் வர்த்தக, தொழில் சபை தெரிவித்தது. இதற்கு முன் இருந்த இயக்குநர் சபை டாக்டர் ஆர். தேவேந்திரனின் தலைமையில் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாடர்ன் மாண்டிசோரி இன் டர்நேஷனல் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் டி.சந்துரு

