எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டெஸ்மண்ட் குவெக், 55, ஐந்தரை ஆண்டு காலம் பதவி வகித்துவிட்டு அந்தப் பதவியில் இருந்து விலகுகிறார். தற்காப்புப் படையின் முன் னாள் தலைவர் நியோ கியன் ஹோங் அவருக்குப் பதிலாக எஸ்எம்ஆர்டி தலைமை நிர்வாகி யாக பொறுப்பேற்பார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. நம்பத்தகுந்த தகவல் வட் டாரங்கள் மூலம் இது தெரியவந் திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. திரு நியோ, 54, இப்போது தற்காப்பு மேம்பாட்டுத் துறையின் நிரந்தரச் செயலாளராக இருக்கி- றார். திரு குவெக்கிற்கு பதிலாக திரு நியோ 2010ல் தற்காப்புப் படைத் தலைவராகப் பொறுப்பேற் றார்.
திரு குவெக் தன்னுடைய பதவியைக் கைவிடுவார் என்று பல மாத காலமாகவே யூகம் நிலவி வந்துள்ளது. இந்த நிலை- யில் இந்தப் பதவி மாற்றம் பற்றிய முறையான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று தெரியவருவ தாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது. திரு நியோ, சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் வெளிநாட்டு கல்விமான் ஆவார். அவருக்கு 30 ஆண்டு ராணுவ வாழ்க்கைத் தொழில் அனுபவம் இருக்கிறது. அவர் லெஃப்டினண்ட் ஜெனர- லாக பதவி உயர்வு பெற்றவர்.
எஸ்எம்ஆர்டியின் தலைமை நிர்வாக அதிகாரியான டெஸ்மண்ட் குவெக் (இடது). இவருக்குப் பதிலாக தற்காப்புப் படையின் முன்னாள் தலைவர் நியோ கியன் ஹோங் பொறுப்பேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்து இருக்கிறது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம், பொதுச் சேவை பிரிவு

