கிளமெண்டியில் திங்கட்கிழமை இரவு நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் உ மெங்கை குடி யிருப்பாளர் ஒருவர் தாக்கிவிட்டார். இரவு 10 மணி அளவில் குடியிருப்பாளர் ஒருவருடன் தான் பேசிக்கொண்டு இருந்ததாகவும் அப்போது இளம் ஆடவர் ஒருவர் திடீரென பாய்ந்து வந்து கைகளால் தன்னைத் தாக்கியதாகவும் டாக்டர் டான் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
"குடியிருப்பாளருடன் பேசிக் கொண்டு இருந்தபோது யாரோ ஒருவர் திடீரென என்னைத் தாக் கியதை உணர்ந்தேன். தரையில் விழுந்து கிடந்தேன்," என்று சம்ப வத்தைப் பற்றி விளக்கியபோது டாக்டர் டான் கூறினார். அங்கு இருந்த மற்றவர்களும் தொண்டூழியர்களும் அந்த இளைஞரை அடக்கிவிட்டனர். இருந்தாலும் டாக்டர் டானுக்கு கையிலும் கழுத்திலும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. சம்பவத்தையடுத்து போலிசும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் அந்த இடத்திற்கு வந் தன. மருத்துவமனைக்கு செல் லும்படி டாக்டர் டானுக்கு ஆலோ சனை கூறப்பட்டது. "அப்போது அங்கே கொஞ்சம் குடியிருப்பாளர்கள்தான் இருந்த னர். அவர்கள் என்னைச் சந்தித் துப் பேசியிருக்கவில்லை என்ப தால் அவர்களை எல்லாம் பார்த்து முடித்த பிறகு மருத்துவமனைக் குச் செல்லலாம் என்று இருந்தேன்.

