தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கிழக்கு - மேற்கு ரயில் தடத்தில் தெம்பனிஸ், பாசிர் ரிஸ் நிலையங்களுக்கு இடையே நேற்றுப் பிற்பகலில் சிறிது நேரம் சேவை தடைபட்டது. பயண நேரம் கூடுதலாக 30 நிமிடங்கள் ஆகலாம் என்று பிற்பகல் 1.50 மணியளவில் டுவிட்டர் மூலம் எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது. அவ்விரு நிலையங்களுக்கு இடையே இலவச பேருந்து சேவைகளும் விடப்பட்டதாக அது கூறியது. பிற்பகல் 2.15 மணியளவில் இன்னும் பத்து நிமிடங்களில் ரயில் சேவை தொடங்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்தது. சற்று நேரத்தில் ரயில் சேவை படிப்படியாக வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தெம்பனிஸ்-பாசிர் ரிஸ் இடையே தடைபட்ட ரயில் சேவை
19 Apr 2018 - 7:02 am
1 mins read
