பயணியின் மூக்கை உடைத்த வெளிநாட்டவர்

1 mins read
63a65acb-d5ea-4bbf-8a31-01f0111a3afc
-

எம்ஆர்டி நிலையத்தில் தன்மீது மோதிய சக பயணியைத் தாக்கி, மூக்கை உடைத்தற்காக முன்னாள் ஆட்சேர்ப்பு ஆலோசகர் ஒருவர் சிறைத்தண்டனையை எதிர்நோக்கு கிறார். பிரிட்டனைச் சேர்ந்த பெஞ்ச மின் ஜான் ஹோல்மன், 33, என்ற அந்த ஆடவர், சக பயணிக்குக் குத்துவிட்டதைக் கடந்த மாதம் ஒப்புக்கொண்டார். இதன் விளை வாக பெஞ்சமினின் வேலையும் பறிபோனது. பெஞ்சமினுக்கு அபராதம் அல்லது குறைந்தபட்ச சிறைத் தண்டனை விதிக்கும்படி அவரு டைய வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மாலை உச்ச நேரத்தின்போது ராஃபிள்ஸ் பிளேஸ் நிலையத்தில் ஹோல்மன் மது அருந்திக்கொண் டிருந்தபோது திரு ஜேசன் ஓவ் ஸி, 30, அவரை இடித்துவிட்டார்.

பொது இடத்தில் திரு ஜேசனைத் தாக்கிய பெஞ்சமின், அவர் பின் வாங்க முயன்றும் விடாமல் பல முறை தாக்கியதால் குறைந்தபட்சம் எட்டு மாதச் சிறைத்தண்டனை விதிக்கும்படி அரசாங்க வழக்க றிஞர் எம்.கயல் பிள்ளை மாவட்ட நீதிபதி கெஸ்லர் சோவிடம் வலி யுறுத்தினார். ஆனால், பெஞ்சமினுக்கு இரு மாதங்களுக்கு முன்னர்தான் திரு மணமானது என்பதால் அவருக்கு அபராதம் அல்லது அதிகபட்சம் நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கும்படி அவருடைய வழக் கறிஞர் கேட்டுக்கொண்டார்.