மக்கள் சந்திப்பு நேரத்தின்போது ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங்கைத் தாக்கியதாக 32 வயது ஆடவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு உள்ளது. முகம்மது அமீன் முகம்மது மைதீன் எனும் அந்த ஆடவர் அத்து மீறி நுழைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அவர் கடந்த திங்களன்று இரவு 10.10 மணியளவில் கிளமென்டி அவென்யூ 2, புளோக் 334ன் முதல் தளத்தில் உள்ள மக்கள் சந்திப்பு அறைக்குள் நுழைந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவர் பலவந்தமாக டாக்டர் டானின் கழுத்தைப் பிடித்து, பின் புறமாக சுவரில் மோதச் செய்து, பலமுறை அவரது உடலில் குத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் அவர், மே 10ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னி லைப்படுத்தப்படுவார்.
சம்பவம் குறித்து டாக்டர் டான் நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் விவரித்திருந்தார்ர். மக்கள் சந்திப்பு நேரத்தின்போது திடீரென இளையர் ஒருவர் புகுந்து, தம்மைத் தாக்கத் தொடங் கியதாக அவர் குறிப்பிட்டிருந்தார். அதன் விளைவாக அவரது கையில் காயமும் கழுத்தில் சிராய்ப்புகளும் ஏற்பட்டன. வேண்டுமென்றே காயம் விளை வித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமீனுக்கு ஈராண்டு வரை சிறைத் தண்டனை, $5,000 வரை அப ராதம் அல்லது இரண்டும் விதிக் கப்படலாம். அத்துடன், அத்துமீறி நுழைந்த குற்றத்தில் அவர் ஈடுபட் டது மெய்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதற்காக மூன்று மாதங்கள் வரை சிறை, $1,500 வரை அபராதம், அல்லது இரு தண்டனைகளும் விதிக்கப்படலாம்.
ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங்

