நிதியமைச்சராக நீடித்தால் மகிழ்ச்சி: அமைச்சர் ஹெங்

நிதியமைச்சராக நீடித்தால் மகிழ்ச்சி: அமைச்சர் ஹெங்

2 mins read
5730943e-88f5-4cf1-9c4d-ef705da64634
-
Google News Preferred Icon

அமைச்சரவை விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ள நிலையில் அதன்பிறகும் நிதியமைச்சராகத் தொடர்ந்தால் மகிழ்ச்சியடை வேன் என்று திரு ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். நிதிச் சவால்களை சிங்கப்பூர் தொடர்ந்து எதிர்நோக்கியுள்ளது என்ற அமைச்சர் ஹெங், ஆகை யால் தமது அமைச்சு இன்னும் ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது என்றும் சொன் னார். அமைச்சரவை மாற்றத்திற்குப் பின்னும் நிதியமைச்சராக நீடிப் பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு திரு ஹெங் இவ் வாறு பதிலுரைத்தார். சிங்கப்பூரின் அடுத்த பிரதம ராவதற்கு அதிக சாத்தியமுள்ள நான்காம் தலைமுறையைச் சேர்ந்த மூன்று அமைச்சர்களில் திரு ஹெங்கும் ஒருவர் என்று பேச்சு நிலவுகிறது. பிரதமர் அலு வலக அமைச்சர் சான் சுன் சிங், கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் ஆகி யோர் மற்ற இருவர்.

சிங்கப்பூரின் வரம்புக்குட்பட்ட நிதி வளங்களை ஒதுக்கீடு செய் வதில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால் வரும் ஆண்டு களிலும் தமது அமைச்சு பர பரப்பாக இயங்கிக்கொண்டு இருக்கும் என்றார் அமைச்சர். "முக்கிய செலவினங்களுக்கு நிதி ஒதுக்கவேண்டும். நமது பொருளியல், சமூகத் தேவை களை எட்டும் வகையில் நமது வளங்களைச் சிறப்பான முறை யில் பயன்படுத்த விரும்புகிறோம். அதே நேரத்தில், பாதுகாப்பிலும் உயர்ந்த நிலையைத் தொடர வேண்டும். இப்படிப் பல்வேறுபட்ட துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது பெரும் சவால்," என்று அவர் விளக்கினார். சிங்கப்பூரும் மற்ற உலக நாடுகளும் அனைத்துலக வரி வருவாய் வசூலில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.