பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தொழில்துறைத் தலைவர்கள்

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தொழில்துறைத் தலைவர்கள்

1 mins read

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உதவும் பணியில் தொழில்துறைத் தலைவர்கள் நூறு பேர் அமர்த்தப்படவுள்ளனர். வேலையிட சமூகத் தலைவர்கள் திட்டத்தின்கீழ் மனிதவள அமைச்சு இவ்வாண்டு பிற்பகுதியில் அவர்களை நியமிக்க இருக்கிறது. ஃபுராமா சிட்டி சென்டரில் நேற்று நடந்த வருடாந்திர 'எஸ்ஜிசெக்யூர்@ஒர்க்பிளேஸ்' கருத்தரங்கின் போது இது அறிவிக்கப்பட்டது. முதலாளிகள், தொழிற்சங்க உயரதிகாரிகள், தொழிலக அல்லது தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட இதுவரை 80 பேர் அடையாளம் காணப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய மனிதவள துணை அமைச்சர் சேம் டான், "இந்தத் திட்டத்தின்மூலம் தங்களது கட்டமைப்பை விரிவுபடுத்தி, அமைதிக் காலத்திலும் நெருக்கடியின்போதும் தாங்கள் சார்ந்த சமூகத்துடன் திறம்படத் தொடர்புகொள்ளும் வகையில் வேலையிட சமூகத் தலைவர்களை ஆயத்தப்படுத்த முடியும் என நம்புகிறோம்," என்றார்.