புதிய விளக்குகள், எச்சரிக்கை ஒலி

புதிய விளக்குகள், எச்சரிக்கை ஒலி

1 mins read
Google News Preferred Icon

ரகசிய அமலாக்க நடவடிக்கைகளுக்காக போக்குவரத்து போலிஸ் கார்களில் விட்டு விட்டு எரியும் புதிய விளக்குகளும் எச்சரிக்கை ஒலிப்பானும் பொருத்தப்பட்டுள்ளன. 'யூஸ் யுவர் ரோட்சென்ஸ்' எனும் தனது ஃபேஸ்புக் பக்கம் ஒன்றில் இந்தப் புதிய அம்சங்களுடன் கூடிய காரின் படத்தை போலிஸ் வெளியிட்டு இருக்கிறது. காரின் பின்புறம் பொருத்தப் பட்டுள்ள விட்டு விட்டு எரியும் விளக்குகளில் ஒரு எல்இடி அறிவிப்புப் பலகையும் அடங்கும். 'சாலைத்தடத்தை விட்டு விலகி இருக்கவும்' என்பது உள்ளிட்ட வெவ்வேறு அறிவுப்புகளை அது காட்டும். போலிசார் நிறுத்தும்போது அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்கி நடக்குமாறு வாகனமோட்டிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.