தாய்க்குத் துன்புறுத்தல், போலிசார் மீது தகாத சொல்; மாது மீது குற்றச்சாட்டு

தாய்க்குத் துன்புறுத்தல், போலிசார் மீது தகாத சொல்; மாது மீது குற்றச்சாட்டு

1 mins read

செரில் செங் யு சின் எனும் 33 வயது மாது தனது 59 வயது தாயாரைத் துன்புறுத்திய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். தோ பாயோவில் உள்ள அவரது வீட்டில் நடந்த அச்சம்பவம் பற்றி செங்கின் 68 வயது தந்தை போலிசாருக்குத் தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற போலிசாருக்கு எதிராக செங் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். மேலும் சம்பவம் குறித்த தகவல்களைப் பெற்றுகொண்டிருந்த போலிஸ் அதிகாரியின் குறிப்புகளைக் கிழித்துள்ளார். அந்தக் குற்றத்தையும் அவர் ஒப்புக்கொண்டார்.