தொழில்நுட்பக் கல்விக் கழகத் தின் எதிர்காலம் குறித்து தான் நம்பிக்கை கொண்டுள்ளதாக அதிபர் ஹலிமா யாக்கோப் தெரி வித்துள்ளார். தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் மேற்கு வளாகத்துக்கு முதல் முறையாக நேற்று காலை சென்ற அதிபர் அவ்வாறு கூறினார். கல்விக் கழகத்தின் வாகன மையத்திற்கும் கட்டமைப்பு பாது காப்பு மையத்திற்கும் சமையலறை, உணவகப் பயிற்சியகத்திற்கும் அதிபர் சென்றார். ஆசிரியர்கள், மாணவர்கள், பட்டம்பெற்றவர்கள் என அனை வரையும் அதிபர் சந்தித்தார்.
"தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள் இளையர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகின் றன. திறன்களை மேம்படுத்த விரும்பும் ஊழியர்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்குகின் றன. இந்தக் கல்விக் கழகத்திற்கு இதுவே சரியான நோக்கம்," என்று அதிபர் ஹலிமா தெரி வித்தார். பயிற்சிக்குப் பயன்படுத்தப் படும் கார் ஒன்றில் அதிபர் கை யொப்பமிட்டார். பயிற்சி சமைய லறையில் செய்யப்பட்டிருந்த 'கேக்'கை அவர் அலங்கரித்தார்.

