மஞ்சள் சமிக்ஞை விளக்கு ஒளித்தபோது வலது பக்கம் திரும்பிய வாகனமோட்டி எதிர்திசையில் வந்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியைக் கவனிக்காததால் 25 வயது திரு அரவிந்த் ராஜா கோபால் மீது மோதியுள்ளார். 2016ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி நடந்த இந்த விபத்தால் காயமடைந்த திரு அரவிந்த் ஒரு வாரத்தில் மரணமடைந்தார். இதன் தொடர்பில் 57 வயது வில்சன் லிம் ஹீ லெங் தனது கவனக்குறைவால் மரணத்தை விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்டார். $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வில்சனுக்கு, அதிகபட்சமாக இரண்டு ஆண்டு சிறையோ அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படலாம்.2018-04-20 06:00:00 +0800
மரணம் விளைவித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட ஓட்டுநர்
20 Apr 2018 - 6:00 am
1 mins read
