மாணவர்கள் கைகலப்பு: விசாரணை நடத்தும் பலதுறைத் தொழிற்கல்லூரி

மாணவர்கள் கைகலப்பு: விசாரணை நடத்தும் பலதுறைத் தொழிற்கல்லூரி

1 mins read

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் கல்லூரியின் விரிவுரை அரங்கில் நேற்று முன்தினம் கைகலப்பில் ஈடுபட்டதையடுத்து அது குறித்து கல்லூரி விசாரணை நடத்திவருகிறது. சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ பதிவுகள் பரவி வந்துள்ளன. அந்த 18 நிமிட காணொளியில் மாணவர் ஒருவர் தகாத வார்த்தைகளைக் கூறி கத்தியதும் அவரை மற்றொரு மாணவர் கழுத்தை நெரித்த காட்சியும் பதிவாகியுள்ளது. விரிவுரையாளர் மாணவரைத் தடுத்தும் சண்டை தொடர்ந்துள்ளது. பாதுகாவலர் வந்தபின் கைகலப்பு முடிவுற்றது. இது குறித்து மாணவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி தெரிவித்துள்ளது.