ஓட்டுநரின் தும்மலால் விபரீதம்

ஓட்டுநரின் தும்மலால் விபரீதம்

1 mins read
f0a6a82c-88fb-4416-8f78-e7d7872f0c5c
-

காரை ஓட்டிசென்றுகொண்டிருந்த போது தும்மல் ஏற்பட்டதால் 66 வயது ஓட்டுநர் வாகனத்தின் கட் டுப்பாட்டை இழந்தார். அதனால் தோ பாயோ லோரோங் 1ன் சாலை தடுப்பில் அவரது கார் மோதி விளக்குக் கம்பம் சாய்ந்தவாறு இருந்தது. காரின் முற்பகுதியில் உள்ள சக்கரம் வெளியாகி சாலையின் இதர இரண்டு தடங்க ளில் சிதறியது.

நேற்று பிற்பகல் சுமார் 12.40 மணியளவில் அந்தச் சம்பவம் பற்றி போலிசாருக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட் டது. அப்பர் தாம்சன் சாலையில் தனது பேத்தியை பாலர் பள்ளியி லிருந்து அழைத்துச் சென்றுகொண் டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக வேலை ஓய்வுபெற்ற ஓட்டுநர் அப்துல் ரஹ்மான் ஹசான் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார். கார் கடுமையாக சேதமடைந்து இருந்தாலும் இச்சம்பவத்தால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. "பெரும் தும்மல் ஏற்பட்டது. அதன்பின்னர் தாம் சாலை தடுப் பிலும் விளக்குக் கம்பத்திலும் மோதியது தெரியவந்தது. விபத்து கள் எல்லா நேரங்களிலும் ஏற்பட லாம் என்பதால் நான் பயப்பட வில்லை," என்று அவர் கூறினார்.

லோரோங் 6 தோ பாயோவை நோக்கிச் செல்லும் தோ பாயோ லோரோங் 1ல் கார் ஒன்று சம்பந்தப்பட்ட விபத்து ஏற்பட்டுள்ளதாக போலிசாருக்கு நேற்று பிற்பகல் சுமார் 12.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கார் மோசமாக சேதப்பட்டிருந்தாலும் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்