அடுத்த மூன்று மாதங்களில், ஏலக்குத்தகையில் விடப்படும் வாகன உரிமைச் சான்றிதழ்கள் குறையவுள்ளது. அதனால் மொத்த வாகனங்க ளுக்கான வாகன உரிமைச் சான் றிதழ்கள் (சிஓஇ) 4 விழுக்காடு குறையும். சிஓஇ ஒதுக்கீட்டில், அரசாங்கம் இரண்டாவது முறையாக பூஜ்ஜிய விழுக்காட்டு வளர்ச்சியை அமல் படுத்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் ஜூலை வரை 24,614 சிஓஇ சான்றிதழ்கள் ஏலக் குத்தகைக்கு விடப்படும். இந்த எண்ணிக்கை, முந்தைய காலாண்டின் எண்ணிக்கையான 25,632ஐ விடக் குறைவு. மற்ற பிரிவுகளுடன் ஒப்பு நோக்க, கார்களுக்கான சிஓஇ ஆக அதிகமாகக் குறைந்திருக்கிறது.
ஓரே மாதத்தில் சான்றிதழ் களின் எண்ணிக்கை 2,779 லிருந்து 2,559க்குக் குறைந்தது. பொதுப் பிரிவுக்கான ஒதுக் கீட்டளவு, 1.7% சரிந்து தற்போது மாதத்திற்கு 1,113 ஆக உள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கான சான்றிதழ்கள், 2.7% அதிகரித்து தற்போது 1,053 ஆக உள்ளது. வர்த்தக வாகனங்களுக்கு அதிக சிஓஇ சான்றிதழ்கள் குத்த கையில் கிடைக்கும். அவற்றுக் கான மாதாந்திர ஒதுக்கீடு 23.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. மற்ற வகை வாகனங்கள் போல் அல்லாமல், வர்த்தக வாகனங்களுக்கான சிஓஇ வளர்ச்சி விகிதம், மாற்றப்படாமல் தொடர்ந்து 0.25 விழுக்காடாக உள்ளது. வர்த்தகங்கள் தங்களது வாக னங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு கால அவகாசம் கொடுக்கவே அந்த முடிவு எடுக் கப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.