லண்டனைச் சேர்ந்த டாக்சி நிறுவனத்தை வாங்கும் கம்ஃபர்ட் டெல்குரோ

லண்டனைச் சேர்ந்த டாக்சி நிறுவனத்தை வாங்கும் கம்ஃபர்ட் டெல்குரோ

1 mins read
b2f5417d-b4cf-4d52-802f-0d58330b54dc
-

சிங்கப்பூரின் 'கம்ஃபர்ட்டெல்குரோ' நிறுவனம், பிரிட்டனைச் சேர்ந்த 'டைல்-எ-கேப்' என்ற டாக்சி நிறுவனத்தை 1.2 மில்லியன் பவுண்டுக்கு ($2.2 மில்லியன்) வாங்கியுள்ளது என அறிவித்திருக்கிறது. வாங்குதல் நடவடிக்கைக்குப் பின்னர், கம்ஃபர்ட்டெல்குரோவுக்குச் சொந்தமான 'சிட்டிஃப்லீட் நெட்வோர்க்ஸ்'ன் மொத்த டாக்சி எண் ணிக்கை 3,000 ஆக அதிகரிக்கும். லண்டனில் தற்போது ஆகப் பெரிய டாக்சி நிறுவனமாக கம்ஃபர்ட்டெல்குரோ உள்ளது. "வாங்குதல் நடவடிக்கையால் ஓட்டுநர்கள், வாடிக்கையாளர் கள் ஆகியோரின் எண்ணிக்கை அதிகமாகிறது. அதனால், கம்ஃபர்ட்டெல்குரோ மேலும் வளர்ச்சி அடைவதுடன் அதன் சிறப்பு மேலும் வலுப்பெறும்," என்று அதன் நிர்வாக இயக்கு நரும் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரியுமான யாங் பான் செங் தெரிவித்தார்.