கம்போங் பூகிஸ்: ரசாயன மண்ணால் 3.14 ஹெக்டர் நிலத்துக்குப் பராமரிப்பு

கம்போங் பூகிஸ்: ரசாயன மண்ணால் 3.14 ஹெக்டர் நிலத்துக்குப் பராமரிப்பு

1 mins read
78bc1336-9d79-4173-ad9e-a7b90b0328d5
-

காலாங்கில் புதிய குடியிருப்புப் பகுதி ஒன்றைத் தயார் செய்வதற்காக அதிகாரிகள் அதற்கான நிலத்தைப் பராமரிக்க உள்ளனர். பழைய எரிவாயு ஆலையான 'காலாங் கேஸ் வோர்க்ஸ்' முன்பு அங்கு தளங்கொண்டிருந்ததால் அந்த நிலப்பகுதியில் ரசாயனம் கலந்திருந்தது. 1862ல் கட்டப்பட்ட அந்த ஆலை 1997 வரை செயல் பட்டது. சுமார் மூன்று காற்பந்துத் திடல் அளவிலான பரப்பளவைக் கொண்டிருக்கிறது. நீர்நிலையை நோக்கியுள்ள அந்த நிலப்பகுதி, அடுத்த 10 ஆண்டுகளில் 4,000 தனியார் வீடுகளைக் கொண்ட இடமாக உருமாறும் எனக் கூறப்படு கிறது. கார்கள் அதிகம் பயன்படுத்தப்படாத பகுதியாக இது இருக்கும். உயிரியல் தொழில்நுட்ப விவகாரங்கள்; பொதுமக்களிடம் கருத்துத் திரட்டு பெற்றோருக்கு ஆரோக்கியமான பிள்ளைகளைப் பெற வழிசெய்யக்கூடிய மரபணு மாற்று முறை, எந்த அளவுக்கு மேற்கொள்ளப்படலாம்? அத்தகைய செயல் நெறியானதா போன்ற வினாக்கள் தொடர்பாக, உயிரியல் நெறி ஆலோச னைக் குழு மக்களிடம் கருத்துகளை நாடுகிறது. உயிரியல் தொழில்நுட்பம் சார்ந்த விவகாரம் ஒன்று குறித்து ஆலோ சனைக்குழு இன்று முதல் ஜூன் 15ஆம் தேதி வரை பொதுமக்களிடமிருந்து கருத்துகளைத் திரட்டும். ஆலோசனைக்குழு, 'ரீச்.கவ்.எஸ்ஜி' என்ற இணையத் தளத்தில், உயிரியல் தொழில்நுட்பம் தொடர்பான ஆவணம் ஒன்றைப் பதிப்பித்தது. அடுத்த ஆண்டுக்குள் ஆவணத்தின் தலைப்பு தொடர்பில் ஆலோசனைக் குழு சில பரிந்துரைகளை வெளியிடும். மேலும் அந்தக் குழு, ஏப்ரல் 28 ஆம் தேதியன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு கலந்துரையாடலை நடத்தும்.