வேலை தேடுவதில் கைதிகளுக்கு உதவி

வேலை தேடுவதில் கைதிகளுக்கு உதவி

2 mins read

ஊழியர் சந்தையில் ஏற்பட்டு வரும் அதிவிரைவான மாற்றம், ஊழியர்கள் பலருக்கு கவலை அளித்துள்ளது. பல ஆண்டுகளாக வேலை அனுபவமின்றி சமுதாயத் திற்குள் மீண்டும் அடியெடுக்கும் முன்னைய கைதிகளுக்கு அந்தக் கவலை பன்மடங்கு அதிகம். அவர்களுக்கு உதவும் பொருட்டு, 'ஸ்கோர்' எனப்படும் மறுவாழ்வு அமைப்புகளுக்கான சிங்கப்பூர் கழகம், கைதிகளுக் கான தனது வேலைவாய்ப்பு வழி காட்டுதலை மேம்படுத்தியிருக் கிறது. மறுவாழ்வு தொடர்பான பல முயற்சிகள் அதன் திட்டங்க ளில் செயல்படுத்தப்படும்.

கைதிகளுக்கு விருப்பமான துறைகளில் அவர்களுக்கு ஏற்ற வேலைகள் கிடைக்க உதவுவது, செயல்திறனை மேம்படுத்துவ தற்குத் தேவையான பயிற்சிகளை வழங்குவது போன்றவை அந்த முயற்சிகளில் சில. அவற்றின் வழி, கைதிகள் தங்களது சொந்தத் திறமைகளைப் பற்றி புரிந்துகொள் ளலாம். சிறையில் நடத்தப்படும் பட்டறைகளில் அந்த முயற்சிகள் இடம்பெறும் என்று இரண்டாம் உள்துறை அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று அறிவித்தார். 'எஸ்பிஎஸ்-ஸ்கோர்' வர்த்தக முன்னேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வருகையளித்த திருமதி டியோ, முன்னாள் கைதி கள் பலர் வேலை கிடைப்பதில் சிர மத்தை எதிர்நோக்குகின்றனர்," என்று கூறினார்.

"கைதிகளுக்குத் திறன்களைப் போதித்தல், வேலை ஏற்பாடு ஆகியவற்றுக்கான முயற்சிகளை 'ஸ்கோர்' அமைப்பு சிறப்பாக செய்து வருகிறது. "ஸ்கோர் தனது திட்டங்களின் பயனைத் தொடர்ந்து மறுஆய்வு செய்ய­ வேண்டும். முன்னாள் கைதிகள் வேலை கிடைப்பதற்கு உதவி செய்வதுடன் அவர்கள் அந்த வேலையில் நீடிப்பதற்குத் தேவைப்படும் தகுதியை அடைய உறுதி செய்யவேண்டும்," என்றும் திருமதி டியோ சொன்னார். ஸ்கோர் அமைப்பில் தற்போது 5,000க்கும் மேற்பட்ட முதலாளிகள் பதிவு செய்துள்ளனர். பட்டறைகளை நடத்துவோருக் குத் தன்முனைப்புப் பயிற்சியும் வழங்கப்படுகிறது.