7 எம்ஆர்டி நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்களில் மாற்றம்

7 எம்ஆர்டி நிலையங்கள் திறந்திருக்கும் நேரங்களில் மாற்றம்

1 mins read
fc1e8beb-cb54-406f-ae2b-935b72e229e6
-

வடக்கு-தெற்கு ரயில் பாதையிலுள்ள ஏழு எம்ஆர்டி நிலையங்கள், வெள்ளிக்கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் வழக்கமான நேரத்திற்கு முன்னரே மூடப்படும். காத்திப், யோ சு காங், அங் மோ கியோ, பிஷான், தோபாயோ, நொவீனா ஆகிய நிலையங்கள் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் இரவு 11 மணிக்கு மூடும். அந்த நிலையங்கள் மே மாதத்தின் வாரயிறுதி நாட்களில் தாமதமாக காலை 8 மணிக்குத் திறக்கும்.

பராமரிப்பு, பழுது பார்ப்பு ஆகியவற்றுக்காக எஸ்எம்ஆர்டி நிறுவனம் அந்த முடிவை எடுத்துள்ளது. மூடப்படும் அந்த நேரங்களில்கூட வாடிக்கையாளர்கள் ஜூரோங் ஈஸ்டுக்கும் யீ‌ஷூனுக்கும் இடையிலும் நியூட்ட னுக்கும் மரினா சவுத் பியருக்கும் இடையிலும் பயணம் செய்யலாம். பாதிக்கப்பட்ட நிலையங்களில் பேருந்து சேவை களை பயணிகள் நாடலாம். கடந்த மாதம், கிழக்கு=மேற்கு ரயில் பாதையிலுள்ள 35 நிலையங்களின் திறக்கும் நேரம் இதேபோல் மாற்றப்பட்டிருந் தன. ரயில்கள் வழக்கமாக நாள்தோறும் காலை 5.30 மணி முதல் கிட்டத்தட்ட நள்ளிரவு வரை இயங்கும்.