ராயல் பிளாஸா ஹோட்டல் வருகையாளர்களிடம் போக்கு வரத்து நிறுவனம் ஒன்றைப் பரிந்துரைப்பதற்காக பணம் பெற்ற ஹோட்டல் ஊழியர்கள் இருவர், தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டனர். அக்டோபர் 2015க்கும் ஜூன் 2016க்கும் இடையே, 33 வயது பிரேங்கி சான் லி ஃபா, சொகுசு வாகன ஓட்டுநர் முபாரக் ஷா ஸமான் ஷாவிடம் $3,869 பணத்தை நேர்மையற்ற முறையில் பெற்றார். ஹோட்டலின் விருந் தாளிகள் நிர்வாக உதவி யாளராகப் பணியாற்றிய சானும் முபாரக்கும் தங்களது குற்றங்களை ஒப்புகொண் டனர். மூன்று முறை கையூட்டைப் பெற்ற சானுக்கு $7,289 அபராதம் விதிக்கப் பட்டது. இப்ராஹிமுக்கு மொத்தமாக $5,107 அபராதம் விதிக்கப்பட்டது.
கையூட்டு: இரு ஊழியர்களுக்கு அபராதம்
1 mins read

