'கோர்ட்ஸ்' நிறுவனம்: அறிவார்ந்த வீட்டுத் தொழில்நுட்பத்துக்கான புதிய மையம்

'கோர்ட்ஸ்' நிறுவனம்: அறிவார்ந்த வீட்டுத் தொழில்நுட்பத்துக்கான புதிய மையம்

1 mins read
be6c5ad4-913f-4c79-b356-eb81a2253afe
-

அறிவார்ந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட எதிர்கால வீடுகள் எப்படி இருக்கும் என்பதை, கோர்ட்ஸ் நிறுவனத்தின் புதிய அறிவார்ந்த வீடுகளுக்கான மைத்தில் வாடிக்கையாளர்கள் காணலாம். தெம்பனிசிலுள்ள 'கோர்ட்ஸ் மெகாஸ்டோர்'ல் அந்த மையம் உள்ளது. வீட்டைப் போன்ற ஒரு சூழலில் கூகல் சாதனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை அந்த மையத்தில் காண்பிக் கப்படுகிறது. சொன்னாலே போதும். "ஓ கே கூகல்" என்ற குரல் அடையாளக் கருவி, கேட்பவரின் விருப்பங் களுக்கு இசைந்து வீட்டிலுள்ள மற்ற கருவிகளை இயக்குகிறது. "அறிவார்ந்த தேச இலக்கைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் தெடர்ந்து முன்னேறும்போது, வாடிக்கையாளர்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் அதிக இணைப்புகளை நாடுகின்றனர்," என்று கோர்ட்சின் தலைமை நிர்வாக அதிகாரி பென் டான் தெரிவித்தார்.