கிளமெண்டி ரோடு=காமன்வெல்த் அவென்யூ வெஸ்ட் சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை நிகழ்ந்த விபத்தில் 19 வயது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்தார். அவர் பயணம் செய்த டாக்சி இன்னொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அவருடன் டாக்சியில் சென்ற 22 வயது இளையரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் கருவிகள் துணைகொண்டு டாக்சியிலிருந்து மீட்டனர். அந்த டாக்சியில் தேசிய பல் கலைக்கழக மாணவர்கள் நால்வர் சென்றதாகக் கூறப்பட்டது. விபத் துக்குள்ளான வாகனங்களின் ஓட்டுநர்களும் காயமடைந்ததால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக் காக தேசிய பல்கலைக்கழக மருத் துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர்.
காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்ததாக போலிஸ் தெரிவித் தது. அம்மாணவியின் மரணத்தை நேற்றுக் காலை அறிக்கை மூலம் உறுதி செய்த பல்கலைக்கழகம், மற்ற மூன்று மாணவர்களில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ள தாகவும் குறிப்பிட்டது. "சம்பவத்தால் பல்கலைக்கழகம் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளது. தேவையான ஆதரவையும் உதவி யையும் வழங்குவதற்காக பல்கலைக் கழக ஊழியர்களும் ஆலோசகர் களும் பாதிக்கப்பட்ட நான்கு மாணவர்களின் குடும்பத்தினர், நண்பர்களுடன் தொடர்பில் உள்ள னர்," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இரு கார் களும் பலத்த சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. சாலையில் கண் ணாடிச் சில்லுகளும் உலோகத் துண்டுகளும் சிதறிக் கிடந்ததைப் படங்கள் காட்டின. விபத்து தொடர்பான காணொளி Roads.sg ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்றுக் காலை பதிவேற்றம் செய் யப்பட்டது. நேராகச் சென்ற கார், வலப்புறமாகத் திரும்பிய டாக்சி மீது மோதியது அதில் தெரிகிறது. சம்பவம் குறித்த போலிஸ் விசாரணை தொடர்கிறது.

