'சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்துறைக் குழு வெற்றி பெற்றுள்ளது'

'சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்துறைக் குழு வெற்றி பெற்றுள்ளது'

1 mins read

மற்றவர்கள் தொல்லைக்கு ஆளா வதைக் கண்டு அதனைத் தடுக் கும் சிறு வயது விருப்பம் 20 வயது சுவா ஹாவ் எங்கின் லட் சியத்துக்கு வித்திட்டுள்ளது. ரிபப்ளிக் பலதுறை தொழிற் கல்லூரியைச் சேர்ந்த அந்த மாண வர், உள்துறைக் குழுவிடம் விருது பெற்ற 52 பலதுறை தொழிற்கல் லூரி மாணவர்களில் ஒருவர். நேற்று நடந்த விருது நிகழ்ச்சி யில் திரு சுவாவுக்கு உள்துறை பட்டய (மெரிட்) உபகாரச் சம்பளம் கிடைத்தது. திறன்களை ஈர்க்கும் நோக்கில், பாடங்களில் சிறந்த மதிப்பெண் களையும் தலைமைத்துவப் பண்புக ளையும் கொண்டுள்ள மாணவர் களுக்கு உள்துறைக் குழு அந்த விருதை வழங்கி வருகிறது. தொழில்நுட்பக் கல்விக் கழகங் களைச் சேர்ந்த மேலும் மூன்று மாணவர்களுக்கு விருது வழங்கப் பட்டது.

விருதுகளுடன் மாணவர்களின் வருடாந்திர அலவன்ஸ் தொகை யும் கல்விக் கட்டணத்துக்கான ரொக்கமும் கொடுக்கப்படுகின் றன. உபகாரச் சம்பள விருதுகளைப் பெற்ற பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கும் தொழில்நுட்பக் கல்விக் கழக மாணவர்களுக்கு மான ஒப்பந்தக்காலம் முறையே நான்கு ஆண்டுகளாகவும் மூன்று ஆண்டுகளாகவும் உள்ளன.