25,000 வரையிலான தாவர இனங்களைப் பாதுகாக்கும் முயற்சி

25,000 வரையிலான தாவர இனங்களைப் பாதுகாக்கும் முயற்சி

2 mins read
a28c6443-0a0f-4778-a020-9856500a6f4b
-

சிங்கப்பூரின் முதலாவது விதைகள் வங்கி அடுத்த ஆண்டு அமைக் கப்படும். அதில் 25,000 வரையி லான தாவர வகைகள் சேகரித்து வைக்கப்படும். உள்ளூரிலும் இவ்வட்டாரத்தி லும் தாவரங்களின் பன்முகத்தன் மையைப் பேணுவது இந்த முயற்சி யின் நோக்கம். சிங்கப்பூர் பூமலையின் விதை கள் வங்கியை தேசிய பூங்காக் கழகம் அமைக்கும். முன்னைய ராஃபிள்ஸ் கல்லூரி வளாகத்திலுள்ள ஆகப் பெரிய காலனித்துவ வீடான 'ஹவுஸ் 4'ல் வங்கி அமையும்.

பூமலையில் நேற்று நடைபெற்ற சிங்கப்பூர் பூந்தோட்ட விழாவின் ஆர்க்கிட் கண்காட்சி நிகழ்ச்சியில் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் வங்கியைப் பற்றி அறிவித்தார். விதைகள் வங்கி என்பது தாவரங்களின் பன்முகத்தன்மைக் கான காப்புறுதி போன்றது என அவர் கூறினார். "ஆய்வுக்கும் மறுசீரமைப்புக் கும் தேவைப்படும் விதைகள் இருப்பதை வங்கி உறுதி செய்யும். வட்டாரம் முழுவதிலும் தாவர இனங்களை மீண்டும் அறிமுகம் செய்யும் முயற்சிகளை பூமலை ஆதரிக்க அந்த வங்கி உதவும்," என்று திரு வோங் கூறினார்.

விதைகள் வங்கியில் ஆய்வுக் கூடம், விதைகளைப் பதனப் படுத்துவதற்கான அறைகள், குளிர்சாதனப் பெட்டிகள் ஆகிய வசதிகள் உள்ளன. வங்கியை உருவாக்கும் பணி கள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும். 2019ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அந்தப் பணிகள் நிறைவுபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. தென்கிழக்காசியாவின் தாவர வகைகளின் எண்ணிக்கையில் பாதி, அந்த வங்கியில் இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் 100 விதை களைச் சேகரிக்க விதைகள் வங்கி இலக்கு கொண்டுள்ளது. 'எச்எஸ்பிசி' வங்கி, இந்த முயற்சிக்கு $103,000 நிதி வழங்கியுள்ளது. ஒன்பது நாள் ஆர்க்கிட் மலர் கண்காட்சி, சிங்கப்பூர் பூந்தோட்ட விழாவின் முதல் அங்கமாக இடம்பெறுகிறது.