கூடுதல் பாதுகாப்பு தேவை இல்லை: எம்.பிக்கள் நிராகரிப்பு

கூடுதல் பாதுகாப்பு தேவை இல்லை: எம்.பிக்கள் நிராகரிப்பு

2 mins read

மக்கள் சந்திப்பு நேரங்களின் போது தங்களுக்கு அதிக பாது காப்பு தேவையில்லை என்று 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சண்டே டைம்சிடம் தெரிவித் தனர். கடந்த வாரம் கிளமெண்டி அவென்யூ, புளோக் 334ன் முதல் தளத்தில் உள்ள மக்கள் சந்திப்பு அறையில் திடீரென நுழைந்த ஓர் ஆடவர், ஜூரோங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் டான் வு மெங்கைத் தாக்கி விட்டார். இந்தச் சம்பவத்தில் தொடர் புடைய முகம்மது அமீன் முகம்மது மைதீன் என்ற 32 வயது ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு, மனநலக் கழகத்தில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்.

இப்படி சில நேரங்களில் ஒரு சிலரால் தாங்கள் தாக்கப்படும் அபாயமிருப்பினும் மெய்க்காவலர் போன்ற கூடுதல் பாதுகாப்பு தங்களுக்குத் தேவையில்லை என்று அந்த எம்.பி.க்கள் தெரி வித்தனர். "எல்லாரும் எளிதில் அணுகக் கூடியவராக நாடாளுமன்ற உறுப் பினர் இருக்கவேண்டும். முகப் பிற்குப் பின்னால் அமர்ந்திருக்கும் வங்கி காசாளர் போல இருக்கக் கூடாது," என்றார் சுவா சூ காங் குழுத் தொகுதி எம்.பி. யீ சியா சிங்.

மக்கள் சந்திப்பு நேரங்களின் போது அடித்தளத் தொண்டூழியர் கள் அவ்விடத்தில் இருப்பது, வெளிச்சமான இடத்தில் மக்கள் சந்திப்பு அமர்வுகளை நடத்துவது, கண்காணிப்பு படக்கருவிகள் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்துகொள்வது போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அந்த எம்.பி.க் கள் தெரிவித்தனர். குடியிருப்பாளர்களைத் தனிப் பட்ட முறையில் சந்திக்க நேரும் போது, அவர்கள் பெரிய, பரும னான பைகளைக் கொண்டு வரும் பட்சத்தில் அவற்றை வெளியில் வைத்துவிடுமாறு கூறிவிடுவேன் என்றார் பைனியர் தனித் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செட்ரிக் ஃபூ.