சமரச மன்றத்தைக் கொண்டுள்ள முதல் தொகுதி எனும் சிறப்பு நீ

2 mins read

சச்சரவுகளைத் தீர்த்துக்கொள்ள சமரச மன்றம் தனக்கென பிரத்தியேகமாக ஒரு சூன் குழுத் தொகுதிக்குக் கிடைக்கவிருக்கிறது. இவ்வாண் டிற்குள் அந்த மன்றம் அமைக்கப் படும். 'அனைத்துலக மத்தியஸ்தர்கள் நிலையம் (சிங்கப்பூர்)' எனும் லாப நோக்கமற்ற அமைப்புடனான கூட்டு முயற்சியுடன் அம்மன்றம் அமைக்கப்படவுள்ளது. சச்சரவுகளை இணக்கமான முறையில் தீர்த்துக்கொள்வதை மன்றம் ஊக்குவிக்கும் என்றார் நீ சூன் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் லீ பீ வா. நெருக்கமான சூழலில் நாம் வாழ்வதால் அண்டைவீட்டாருடன் சச்சரவுகள் எழுவது இயல்புதான் என்று திருவாட்டி லீ சொன்னார். எடுத்துக்காட்டாக, அதிக சத்தம், சிகரெட் பிடிப்பதால் வரும் புகை ஆகியவற்றை அவர் குறிப்பிட்டார்.

"இரு தரப்பினரும் உடன்படும் பட்சத்தில், அதே சமூகத்தில் அவர்கள் வாழ விரும்பினால், சட்ட ரீதியாக அணுகுவதைவிட சமரச முயற்சி நல்ல விளைவைத் தரும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார் அவர். கிட்டத்தட்ட நூறு அடித்தளத் தலைவர்களுக்கு அனைத்துலக மத்தியஸ்தர்கள் நிலையம் பயிற்சி அளித்த பிறகு செய்தியாளர்களி டம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

சமரசத்தையும் மற்ற முறைசாரா வழிகளையும் கையாண்டு சச்சரவு களைத் தீர்த்து வைப்பது எப்படி என்று அந்த நான்கு மணி நேரப் பயிற்சியில் பங்கேற்பாளர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. அடித்தளத் தலைவர்கள் ஏற் கெனவே உள்ளக சமரசப் பயிற்சி பெற்றிருந்தபோதும் இந்த அமர்வும் புதிய மன்றமும் அவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் என்று திருவாட்டி லீ கூறினார். செம்பவாங், வெஸ்ட் கோஸ்ட் உள்ளிட்ட மற்ற குழுத் தொகுதி களிலும் சமரசப் பயிற்சியை விரிவு படுத்த பணி நடந்து வருவதாக அனைத்துலக மத்தியஸ்தர்கள் நிலையத்தின் தலைவர் டாக்டர் லிம் யான் யுவான் தெரிவித்தார்.