சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வூட்டிய பூமி நாள்

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வூட்டிய பூமி நாள்

1 mins read

சாலையைக் கடக்கும்போது, ஒரு முனையில் குடையை எடுத்துக் கொண்டு மழை அல்லது வெயிலில் இருந்து தங்களைக் காத்துக் கொண்டபின் மீண்டும் அதை மறுமுனையில் வைத்துவிடுவது பெரும்பாலானோருக்குச் சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால், குடைகளைப் பகிர்ந்து கொள்வது போன்ற நடவடிக்கை கள், கார்பன் வெளியீட்டைக் குறைக்க உதவும் வகையில் நீ சூன் சௌத் குடியிருப்பாளர்களை காரில் செல்லாமல், நடந்து செல் வதை ஊக்குவிக்கிறது. சுற்றுப்புறம் குறித்து விழிப்பு ணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ் வோர் ஆண்டும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமி நாளாக அனுசரிக்கப் படுகிறது.

அதையொட்டி நீ சூன் குழுத் தொகுதியில் நேற்று குப்பைகளை அகற்றுவது உட்பட பல நடவடிக் கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அத்தருணத்தில் குடை பகிர்வு இயக்கத்தைத் தொடங்கி வைத்தார் அக்குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லீ பீ வா. இந்த பூமியைக் காக்கும் முயற் சியில் குடியிருப்பாளர்கள் தங்கள் பங்கை ஆற்றுவதை குடை பகிர்வு இயக்கம் ஊக்குவிப்பதாகக் குறிப் பிட்ட திருவாட்டி லீ, "இது செலவு குறைந்த, ஆரோக்கியமான செயல்," என்றும் குறிப்பிட்டார்.