நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், உயர் ரத்தக் கொழுப்பு போன்ற நாட்பட்ட பாதிப்புகளைக் கொண்ட ஊழியர்கள், அதற்கான பரிசோத னைகளை மேற்கொண்டு, முன் கூட்டியே அவற்றைச் சமாளிப்ப தற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியும். வேலையிடங்களில் பாதுகாப்பு, சுகாதாரத்தை ஊக்குவிக்கும் புதிய முயற்சி இதற்கு வழிவகை செய்கிறது. இதன்மூலம் எளிதில் பாதிக்கப் பட வாய்ப்புள்ள ஊழியர்களை அடையாளம் கண்டு, ஓராண்டுக்கு அவர்களின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துவதன் மூலம் குறைந்தது ஐந்தில் ஒருவரின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை எட்ட முடியும் என்றார் மனிதவள இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ.
"மோசமான உடல்நலம் தொடர் புடைய பாதுகாப்புக் குறைபாடு களைக் குறைக்கவும் இது உதவி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது," என்று திருவாட்டி டியோ குறிப் பிட்டார். வேலையிடப் பாதுகாப்பு, சுகா தார மன்றம், சுகாதார மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின்கீழ் மொத்த வேலை யிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கட்ட மைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தச் சேவைகளால் அடுத்த மூன்று ஆண்டுகளில் 500,000க் கும் மேற்பட்ட ஊழியர்கள் பலன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக, மொத்த வேலையிடப் பாதுகாப்பு, சுகாதார சேவை மையங்கள், வேலையிட மருத்து வர்கள், தொழில்சார் சுகாதார தாதியருக்கு நிபுணத்துவ பயிற்சி, சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண தனிப்பயன் சேவைகள் போன்ற வழிகள் கையாளப்படும். அண்மைய ஆண்டுகளில் நிகழ்ந்த வேலையிட மரணங்களில் பாதி, மோசமான உடல்நலம் கார ணமாக ஏற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கைகள் இடம்பெறுவதாக திருவாட்டி டியோ குறிப்பிட்டார். 'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் நேற்று நடைபெற்ற இவ்வாண்டிற் கான தேசிய வேலையிடப் பாது காப்பு, சுகாதாரப் பிரசாரத்தில் கலந்துகொண்ட திருவாட்டி டியோ இவ்வாறு தெரிவித்தார்.
'அவர் தெம்பனிஸ் ஹப்'பில் நேற்று நடந்த தேசிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பிரசாரத்தில் கலந்துகொண்டு, நடவடிக்கைகளில் பங்கேற்ற மனிதவள இரண்டாம் அமைச்சர் ஜோசஃபின் டியோ (முதல் வரிசையில் வலமிருந்து 2வது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

