காரும் பேருந்தும் மோதிய விபத்தில் 23 வயது பெண் மரணம்

காரும் பேருந்தும் மோதிய விபத்தில் 23 வயது பெண் மரணம்

1 mins read
ca517d88-b3fa-4bbc-a6c7-74f8b331cc38
-

க்கிட் தீமாவில் சாலைச் சந்திப்பு ஒன்றில் நேற்று முன்தினம் பின்னி ரவு எஸ்எம்ஆர்டி பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் காரில் இருந்த 23 வயதுப் பெண் ஒருவர் மாண்டுபோனார். கறுப்பு நிற மெர்சிடிஸ் காரை ஓட்டி வந்த 24 வயதுப் பெண்ணும் அதனுள் இருந்த இன்னொருவரும் காயமடைந்தனர். அவர்கள் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிகிறது. ஜாலான் அனாக் புக்கிட்= ஜாலான் ஜூரோங் கெச்சில் சந் திப்பில் பேருந்தும் காரும் மோதிக் கொண்ட விபத்து குறித்து இரவு 1 மணியளவில் தகவல் கிடைத்த தாக போலிஸ் தெரிவித்தது.

"கார் ஓட்டுநரான 24 வயதுப் பெண்ணும் அதில் பயணம் செய்த 26 வயது ஆடவரும் சுயநினை வுடன் இங் டெங் ஃபோங் மருத் துவமனைக்குக் கொண்டு செல்லப் பட்டனர்," என்று போலிஸ் கூறியது. அதே காரில் பயணம் செய்த 23 வயதுப் பெண் தேசிய பல் கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுய நினைவின்றி இருந்ததாகவும் அங்கு அவர் உயிரிழந்துவிட்ட தாகவும் போலிசார் தெரிவித்தனர்.

ஜாலான் அனாக் புக்கிட்=ஜாலான் ஜூரோங் கெச்சில் சந்திப்பில் காரும் எஸ்எம்ஆர்டி பேருந்தும் மோதியதில் காரில் பயணம் செய்த இளம்பெண் உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்ற இன்னொரு பெண்ணும் அதில் இருந்த ஆடவர் ஒருவரும் காயமடைந்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்