விண்மீன்களை உற்றுநோக்கு வதன் மூலமாக வானவியலைப் பற்றி அறிந்துகொள்ளவும் தங்கள் குழந்தைகளுடன் கரையோர நடையில் பங்கேற்று கடல்வாழ் உயிரினங்களைக் கண்டு மனம் மகிழவும் கருப்பொருளுடன் கூடிய முகாம்களை மக்கள் கழகம் நேற்று அறிமுகம் செய்தது. குடும்பப் பிணைப்பை மேம் படுத்தவும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் வெளியிடங் களுக்குச் சென்று பொழுது போக்கி இன்புறவும் இந்த முகாம் கள் இலக்கு கொண்டுள்ளன. செம்பவாங்கில் உள்ள ஜாலான் மெம்புரோங்கில் கட்டப்பட்டுள்ள புதிய முகாமிடத்தில் ஜூன், நவம்பர் மாதங்களில் இந்த முகாம்கள் நடைபெறும். மக்கள் கழகத்தின் 'செம்ப வாங் வாட்டர் வென்ச்சர்' நீர் சாகச வசதிக்கு அருகே 7,000 சதுர மீட்டரில் அமைந்துள்ள அந்த முகாமிடத்தில் ஒரே நேரத் தில் 200 பேர் முகாமிட முடியும்.
கல்விசார் குடும்ப நடவடிக்கை களுக்கு ஏற்ற தளத்தை அமைத் துக் கொடுப்பதற்காக சுற்றியுள்ள செழுமையான பசுமைவெளியை யும் அலையிடைப் பகுதியையும் முகாமிடம் பயன்படுத்திக் கொள் ளும் என்று செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப் பினர் லிம் வீ கியாக் கூறினார்.

