முதலாளியை கத்தியால் குத்திக்கொன்ற பணிப்பெண்ணுக்கு 15 ஆண்டு சிறை

1 mins read

வயதான முதலாளி தன்னை நச்சரித்ததால் கத்தியை அவரது கழுத்தில் சொருகிய பணிப்பெண்ணுக்கு 15 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 38 வயது பணிப்பெண் மினாவை போலிசார் விசாரித்தபோது, 77 வயது திருவாட்டி தே குவீ லாங் தற்கொலை செய்துகொண்டதாக முதலில் பொய்யுரைத்தார். கடந்தாண்டு பிப்ரவரி 13, தெம்பனிஸ் ஸ்திரீட் 22லுள்ள அடுக்குமாடி வீட்டில் நோக்கமற்ற அந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்தது. மினா கைபேசியிலேயே அதிக நேரம் செலவிட்டதால் தாமதமாக தனது மதிய உணவை உண்டதாகக் கூறப்பட்டது. அதனால் திருவாட்டி தே தன்னைத் திட்டியதாகவும் ஆத்திரத்தில் அவரைக் கத்தியால் குத்தியதாகவும் மினா கூறினார்.