சுற்றுச்சூழல் பாதுகாப்பு: மரம் நட்டு மாணவர்களுக்குப் போதனை

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: மரம் நட்டு மாணவர்களுக்குப் போதனை

1 mins read
e3c73d87-d9f6-4f90-ac25-f096eecccd1c
-

ஆண்டுதோறும் ஏப்ரல் 22ஆம் தேதி பூமி நாளாக அனுசரிக்கப்படுவதை ஒட்டி ஜூயிங் தொடக்கப் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து டுரியான், மா, பலா உள்ளிட்ட எட்டு மரக்கன்றுகளை நேற்று நட்டனர். சுற்றுச்சூழல் நம்முடைய மூன்றாவது ஆசிரியரைப் போல என்றும் அதனைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மாணவர்களுக்குக் கற்றுத் தர மரம் நடுவது ஒரு வழி என்றும் சொன்னார் அப்பள்ளியின் முதல்வர் ஸ்ரோயா ஜஸ்வந்த் (வலது).

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சுவா சூ காங் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் யீ சியா சிங் (வலமிருந்து 2வது), பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு அதிகமாக இருப்பது குறித்தும் இவ்வட்டாரத்தில் மீன்வளம் குறைந்து வருவது குறித்தும் அக்கறை தெரிவித்தார். ஜூயிங் தொடக்கப்பள்ளியின் பெற்றோர் ஆதரவுக் குழுத் தலைவர் ரஹிமா ஜாஃபர் (இடது), பள்ளிகளுக்கான கண்காணிப்பாளர் (மேற்குக் குழுமம் 3) லீ செங் யாய் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்