சிங்கப்பூர்' ஏற்று நடத்தும் என்று கடல் துறை, துறைமுக ஆணையம்

சிங்கப்பூர்' ஏற்று நடத்தும் என்று கடல் துறை, துறைமுக ஆணையம்

2 mins read

புதிய துறைமுகத்தை பிஎஸ்ஏ ஏற்று நடத்தும் துவாஸில் அமையவிருக்கும் புதிய பெரும் துறைமுகத்தை 'பிஎஸ்ஏ தெரிவித்திருக்கிறது. 2021ஆம் ஆண்டிலிருந்து கட்டங்கட்டமாகத் திறக்கப்படவுள்ள துறைமுகத்தை இரண்டாவதாக வேறு எந்த நிறு வனமும் ஏற்று நடத்தாது என்று ஆணையம் கூறியது. வட்டார நாடுகளிலிருந்து வலு வான போட்டியை எதிர்நோக்கும் அந்தத் துறைமுகத்தைத் திறம்பட ஏற்று நடத்துவதே இம்முடிவிற்குக் காரணம் என்பதை ஆணையப் பேச்சாளர் 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழிடம் தெரிவித்தார். "இரண்டு துறைமுகங்களையும் ஒரே நிறுவனம் ஏற்று நடத்தும் போது வளங்களைச் சிறந்த முறையில் பகிர்வதும் எளிதாகும். அதனால் செலவினமும் குறைய லாம்; துறைமுகங்கள் இன்னும் சீராக இணைந்து செயல்படலாம்" என்று பேச்சாளர் கூறினார்.

இதற்கு முன்னர், அந்த துறைமுகத்தை பிஎஸ்ஏ அதனைத் தனியாக ஏற்று நடத்துமா என்பது குறித்துச் சந்தேகங்கள் எழுந்தன. நெதர்லாந்திலுள்ள ரோட்டர்டாம், ஹாங்காங், தென்கொரியாவின் பூசன் ஆகிய நகரங்களிலுள்ள துறைமுகங்களை ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் நடத்து வதாக, கப்பல்துறை நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 2040ஆம் ஆண்டில் துறை முகம் முழுமையாக திறக்கப்பட்ட பின் ஆண்டிற்கு 65 மில்லியன் '20- அடி நீள சரக்குக் கொள்கலன்'களைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும்.

துறைமுகம் 2016ல் கையாண்ட அவ்வகை சரக்குக் கொள்கலன் களின் எண்ணிக்கை 30.9 மில்லி யனாக இருந்தது. சென்ற ஆண் டில் அது 33.7 மில்லியனாக அதி கரித்தது. இப்போது பாசிர் பாஞ்சாங், தஞ்சோங் பகார், கெப்பல், பிரானி கொள்கலன் முனையங்களால் கையாளப்படும் துறைமுகச் செயல் பாடுகள் முழுவதுமாக துவாசிற்கு இடம்பெயரும். ஷங்காய்க்கு அடுத்து உலகின் பரபரப்பான 2வது பெரிய கொள்கலன் துறை முகமாக சிங்கப்பூர் திகழ்கிறது.