இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு அதிகரிப்பு

இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு அதிகரிப்பு

1 mins read

இணையப் பாதுகாப்பு நடை முறைகள் தொடர்பில் பொதுமக்க ளிடையே விழிப்புணர்வு அதிகரித் துள்ளதை சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் (சிஎஸ்ஏ) வருடாந்திர ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. '2FA' எனப்படும் இருவழி உறுதிப்படுத்தலைப் பின்பற்றுவோர் கூடியுள்ளனர். அதுபோல, இணை யம் வழியாக பணப் பரிவர்த்தனை மேற்கொள்வதிலும் கைபேசிச் செயலி தரவிறக்கத்திலும் கவனம் செலுத்துவோர் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. ஆய்வில் பங்கெடுத்தவர்களில் பலரும் '2FA' உறுதிச் செயல்முறை குறித்து அறிந்துள்ளனர். அந்தச் செயல்முறை குறித்து அறிந்திரா தோர் எண்ணிக்கை 2016ல் பத்து விழுக்காடாக இருந்தது. கடந்த ஆண்டில் அது ஆறு விழுக்கா டாகக் குறைந்தது.

நம்பகமான இணையத் தளம் தானா என்பதை உறுதி செய்யாமல் இணையவழி பணப் பரிவர்த்த னைகளில் ஈடுபடுவோரின் எண் ணிக்கையும் குறைந்துள்ளது. 2016ல் 38 விழுக்காடாக இருந்த அந்த எண்ணிக்கை 2017ல் 20 விழுக்காடாகக் குறைந்தது. அதேபோல, மறைச்சொல் ஏது மின்றி பொது இடங்களில் அனைவரும் பயன்படுத்தக்கூடிய 'வைஃபை' சேவையை நாடியோர் எண்ணிக்கையும் சரிவு கண்டது.

முந்தைய ஆண்டில் 37 விழுக்கா டாக இருந்த அத்தகையோரின் எண்ணிக்கை 2017ல் 12% சரிந்து 25 விழுக்காடானது. 'பென்டிரைவ்' போன்ற புறச் சாதனங்களைப் பயன்படுத்துமுன் அல்லது அவற்றிலிருந்து கோப்பு களைத் தரவிறக்கம் செய்து திறக்குமுன் அவற்றில் நச்சுநிரல் உள்ளனவா என்று 'ஸ்கேன்' செய்யாதோரின் எண்ணிக்கை 30 விழுக்காட்டுப் புள்ளிகள் குறைந் துள்ளது. 2016ல் 41 விழுக்காடாக இருந்த அந்த எண்ணிக்கைக் கடந்த ஆண்டில் 11% ஆனது.