அமைச்சரவையில் இருந்து விலகும் அனுபவசாலிகள்

அமைச்சரவையில் இருந்து விலகும் அனுபவசாலிகள்

1 mins read
9d951f3d-44b5-4c8c-9600-cc75f4f52f78
-

சிங்கப்பூரில் மே மாதம் 1ஆம் தேதி நடப்புக்கு வரும் அமைச்சரவை மாற் றத்தை அடுத்து அமைச்சரவையில் இருந்து மூன்று அமைச்சர்கள் ஓய்வு பெறுகிறார்கள். அவர்கள் மூவரும் பழுத்த அனு பவசாலிகள். (இடது படம்) வர்த்தக தொழில் அமைச்சர் (வர்த்தகம்) லிம் ஹங் கியாங், 64, அவர்களில் ஒருவர். இவர் அமைச்சரவையில் இருந்து விலகினாலும் தனக்குப் பதிலாக அந்தப் பொறுப்பை ஏற் கும் சான் சுன் சிங்கிற்கு சிறப்பு வர்த்தக ஆலோசகராக இருப் பார்.

மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே, 63 (நடு), தொடர்பு தக வல் அமைச்சர் யாக்கூப் இப்ரா ஹிம், 62 (வலது), ஆகியோர் அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்ளும் இதர இரண்டு பேர் ஆவர். அமைச்சர் பதவியைக் கைவிட்ட பிறகும் இந்த மூவரும் தங்கள் தொகுதிகளை நாடாளு மன்ற உறுப்பினர்கள் என்ற முறையில் பிரதிநிதிப்பார்கள்.

டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் ஜாலான் புசார் குழுத் தொகுதி யையும் லிம் ஹங் கியாங் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியை யும் லிம் சுவீ சே ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியையும் பிரதிநிதிப் பார்கள்.