தொடர்பு, தகவல் அமைச்சராக ஈஸ்வரன்

தொடர்பு, தகவல் அமைச்சராக ஈஸ்வரன்

1 mins read
60e5ac7f-6c5c-4b1c-984e-3760ff600387
-

வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் தற்போதைய அமைச்சர் யாக்கூப் இப்ராஹிமுக்குப் பதி லாக தொடர்பு, தகவல் அமைச் சராகப் பொறுப்பேற்கிறார் திரு எஸ். ஈஸ்வரன். மேலும் வர்த்தக தொழில் அமைச்சில் வர்த்தக உறவு களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராகவும் திரு ஈஸ்வரன் பணியாற்று வார். திரு லிம் ஹங் கியாங் வர்த் தக தொழில் அமைச்சின் சிறப்பு ஆலோசகராக மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்படுவார்.

"தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், ஊடகத்துறை என தொடர்பு, தகவல் அமைச் சின் பல அம்சங்களில் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஆவ லாக இருக்கிறேன்.

"அதே வேளையில் அரசாங் கத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தகவல் தளத்தை வலுப்படுத்துவது மிகவும் முக்கி யமானது.

"வர்த்தக தொழில் அமைச்சில் எனது பணிகள் மிகுந்த திருப் தியளித்தன. நிறுவனங்கள் மேம் பாடு, பயணத்துறை வளர்ச்சி, ஆய்வு மற்றும் மேம்பாடு, எரிசக்தி சந்தை மேம்பாடு என்று எல்லா துறைகளும் சுவாரஸ்யமானவை," என்று ஜெர்மனிக்குச் சென்றுள்ள அமைச்சர் ஈஸ்வரன் கருத்துரைத்தார்.