ஓங் யி காங் கல்வி அமைச்சை வழிநடத்துவார் ஒரே அமைச்சரின்கீழ் மீண்டும் கல்வி அமைச்சு

ஓங் யி காங் கல்வி அமைச்சை வழிநடத்துவார் ஒரே அமைச்சரின்கீழ் மீண்டும் கல்வி அமைச்சு

2 mins read
fe2eea33-1e97-4ec8-aa47-d5f8eeacd181
-

இம்மாதத் தொடக்கத்தில் நடை பெற்ற இளையர் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது, சமத்துவ மின்மை பற்றி தேசிய உரையாடல் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார் 48 வயது திரு ஓங் யி காங். இப்போது, கல்வி அமைச்சு முழுமையாக அவரது பொறுப்பின்கீழ் வருவ தால், இப்பிரச்சினையைச் சரி செய்ய இன்னும் அதிகமாகச் செய் யவிருக்கிறார். கல்வி அமைச்சில் உயர்கல்வி, திறன்கள் ஆகியவற்றுக்குப் பொறுப்பு வகித்த திரு ஓங், மே முதல் தேதியிலிருந்து திரு இங் சீ மெங் கவனித்துவரும் பள்ளிகள் பிரிவுக்கும் பொறுப்பேற்பார். கல்வி அமைச்சு முன்புபோல மறுபடியும் ஒரே அமைச்சரின்கீழ் இடம்பெறும்.

திரு இங் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸின் துணைத் தலைமைச் செயலாளராகத் திங்கட்கிழமை நியமிக்கப்பட்டார். இவர் தொழிற் சங்க காங்கிரஸின் தலைவராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படு கிறது. நேற்று அறிவிக்கப்பட்ட அமைச் சரவை மாற்றங்களின் ஒரு பகுதி யாக, இரண்டாம் தற்காப்பு அமைச் சர் பதவியை திரு ஓங் கைவிடு வார். பொதுச் சேவை புத்தாக்கத்திற் குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பொறுப்பையும் அவர் கைவிடுவார். வர்த்தகத் தொழில் அமைச்சராகப் பொறுப்பேற்கும் திரு சான் சுன் சிங், ஒட்டுமொத்த பொதுச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சராக அப்பொறுப்பை ஏற்பார்.

பிரதமர் பதவியை ஏற்கக்கூடிய வர்களென பரவலாகக் கருதப்படும் மூவரில் ஒருவரான திரு ஓங், 2015 பொதுத் தேர்தலில் செம்ப வாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு சிறிது காலத்திலேயே அமைச்சரவையில் சேர்ந்தார். அப்போதைய சிங்கப்பூர் ஊழிய ரணி மேம்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியான திரு ஓங், கல்வி அமைச்சராக (உயர்கல்வி, திறன்கள்) திறமை யின் அடிப்படையிலான மாணவர் சேர்ப்பை விரிவுபடுத்தியதோடு, பன்மயமாகிவரும் உயர்கல்விச் சூழலில் வாழ்நாள் கற்றல் வாய்ப்பு களையும் விரிவுபடுத்தினார். கல்வித் துறையில் கல்வித் தேர்ச்சிக்குப் பதிலாகத் திறமை யிலும் ஆர்வத்திலும் கவனம் செலுத்துவதற்கும் அவர் வலுவான ஆதரவளித்தார்.

இந்தக் கொள்கை இனி உயர் கல்விக்கு முந்திய பள்ளிகளிலும் அமலாக்கப்படலாம். அண்மையில் அறிவிக்கப்பட்ட சில கொள்கை மாற்றங்களை அவர் அமலாக்க வேண்டியிருக் கும். நேரடி மாணவர் சேர்க்கை திட்டங்களின் பொது கல்விச் சோதனைகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நீக்கப்படுவதும் 2023ஆம் ஆண்டுக்குள் கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகளின் எண்ணிக்கையை 50 ஆக உயர்த் துவதும் அவற்றுள் அடங்கும். பொதுச் சேவையில் புத்தாக்கத் தைத் தூண்டும் பொறுப்பை ஏற்றி ருந்த திரு ஓங், அரசாங்க ஊழி யர்கள் "பெரிதாகச் சிந்தித்து, சிறிதாகத் தொடங்கி, விரைவாகச் செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார். இடையூறுகள் நிறைந்த யுகத் தில், கல்வித் துறையிலும் இந்த முழக்கவரி நடைமுறைப்படுத்தப் படுவதைக் காண விரும்புவதாகச் சில கவனிப்பாளர்கள் கூறினர்.