சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையத்திற்கு இதுவரை இல்லாத அளவில், 96.5 விழுக்காட்டினர் தங்களது வருமானம் குறித்த விவரங்களை நேரத்துடன் சமர்ப்பித்துள்ளனர். கடந்த ஆண்டின் விகிதமான 96ஐவிட இது அதிகம் என்று ஆணையம் தெரிவித்திருக்கிறது. பெரும்பாலோர் = கிட்டத்தட்ட 780,000 பேர்= இணையத்தின்வழி அவ்வாறு செய்துள்ளனர். சுமார் 23 விழுக்காட்டினர், தங்களது கைபேசி வழியாக 'மைடெக்ஸ்' செயலியைப் பயன்படுத்துகின்றனர்.
வருமான விவரங்களைச் சமர்ப்பிக்கக் கோரும் குறிப்பைச் சுமார் 80,000 பேர் பெற்றுள்ளனர். 6,000 பங்காளித்துவங்கள் பிப்ரவரி இறுதிக்குள் தங்களது 'பி' ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஆணையம் கூறியது. வருமான விவரங்களை இன்னும் சமர்ப்பிக்காதோர் உடனே செய்யவேண்டும் என்றது ஆணையம். உதவி தேவைப்படும் நபர்கள், 1800-356-8300 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது www.iras.gov.sg என்ற இணையத்தளத்தையும் நாடலாம்.

