பல் மருத்துவருக்கு ஓராண்டு இடைநீக்கம், அபராதம்

பல் மருத்துவருக்கு ஓராண்டு இடைநீக்கம், அபராதம்

2 mins read
dad91a18-99a8-40e5-9b30-4e91b4aebad5
-

நோயாளியின் சொல் கேட்டு பொய்க் கணக்கு காட்டி மெடிசேவ் கணக்கிலிருந்து பணம் பெற்றுக் கொண்ட பல் மருத்துவருக்கு ஓராண்டு இடைநீக்கம் விதிக்கப் பட்டுள்ளது. அந்தப் பெண் நோயாளி செய்யவிருந்த பல் மருத்துவ சிகிச்சைக்கான கட்ட ணத்துக்காக டாக்டர் ஸ்டீவன் ஆங் கியாம் ஹாவ் இந்தக் குற்றத்தைக் கடந்த 2014ஆம் ஆண்டில் புரிந்தார். அனுமதிக்கப்படாத மெடிசேவ் கோரிக்கைகளைப் பெற மோசடி செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்று சிங்கப்பூர் பல் மருத்துவ மன்றம் கூறியது. கடந்த 2014ஆம் ஆண்டில் அந்தப் பெண் நோயாளி டாக்டர் ஆங்கிடம் பல் மருத்துவ ஆலோசனை பெற்றார்.

அவருக்கு $22,100 பெறுமான முள்ள பல் மருத்துவ சிகிச்சையை டாக்டர் ஆங் பரிந்துரை செய்தி ருந்தார். முழு கட்டணத்தையும் மெடிசேவ் கணக்கைப் பயன்படுத்தி செலுத்த முடியாததால் தமது கண வரின் மெடிசேவ் கணக்கைக் கூடு தலாகப் பயன்படுத்துமாறு அப் பெண் பரிந்துரைத்திருந்தார். ஆனால் இரண்டு மாதங்கள் கழித்து டாக்டர் ஆங்கிடம் அந்தப் பல் மருத்துவ சிகிச்சையை செய்யப்போவதில்லை என்று தமது முடிவை அந்தப் பெண் மாற்றிக் கொண்டார். தம்பதியரின் மெடி சேவ் கணக்கிலிருந்து பெற்றுக் கொண்ட பணத்தை டாக்டர் ஆங் ரொக்கமாக அப்பெண்ணிடம் திருப்பிக் கொடுத்தார். இந்நிலையில், பொய் கணக்கு காட்டி டாக்டர் ஆங் மெடிசேவ் கணக்கிலிருந்து பணம் பெற்றுக் கொண்டது குறித்து அந்தப் பெண் மன்றத்திடம் புகார் செய்தார்.

அந்தப் பெண் நோயாளிக்கு உதவி செய்யவே பொய்யான கணக்கு காட்டி மெடிசேவ் கணக் கிலிருந்து பணம் பெற்றுக் கொண் டதாக டாக்டர் ஆங் குறிப்பிட்டார். 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கும் செப்டம்பர் 30ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தப் பெண் நோயாளிக்கும் அவரது கணவ ருக்கும் தாம் பல் மருத்துவ சிகிச்சைகளை அளித்ததாக அவர் கூறினார். ஆனால் இதற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று சுகாதார அமைச்சின் கணக்குத் தணிக் கைக் குழு தெரிவித்தது. பொய் கணக்கு காட்டி பெற்றுக் கொண்ட பணத்தை டாக்டர் ஆங் திருப்பிக் கொடுத்து விட்டபோதி லும் அவர் நேர்மையற்ற நடவடிக் கையில் ஈடுபட்டிருந்ததால் அவ ருக்கு இடைநீக்கம் விதிக்கப்பட்ட தாக மன்றத்தின் ஒழுங்கு முறைக் குழு தெரிவித்தது. டாக்டர் ஆங்கிற்கு $25,000 அபராதம் விதிக்க மன்றம் முடிவெடுத் துள்ளது.

இடைநீக்கம் செய்யப்பட்ட டாக்டர் ஸ்டீவன் ஆங் கியெம் ஹாவ். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்