சிங்கப்பூர் பரிந்துரைக்கும் ஆசியா னின் அறிவார்ந்த நகரங்கள் பட்டியலில் வியட்னாமின் ஹனோய், ஹோ சி மின், டா னாங் ஆகிய நகரங்கள் இடம் பெறும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். "கடந்த ஆண்டு வியட்னா முக்குப் பயணம் மேற்கொண்ட போது இந்த மூன்று நகரங் களுக்கும் சென்றிருந்தேன். அவற் றின் துரிதமான நகர மேம்பாடு என்னைக் கவர்ந்தது. இந்த மூன்று நகரங்களையும் அறிவார்ந்த நகரங்கள் கட்டமைப்பில் இணைத் துக்கொண்டால் ஆசியான் மேலும் துடிப்புமிக்கதாகும்," என்று பிரதமர் லீ கூறினார். வியட்னாம் பிரதமர் ஙவேன் சுவான் புக் சிங்கப்பூருக்கு மூன்று நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த வாரயிறுதியில் 32வது ஆசியான் உச்சநிலை மாநாடு நடைபெற இருக்கிறது. பிரதமர் லீ அவருக்கு நேற்று இரவு விருந்தளித்து உபசரித்தார். அப்போது சிங்கப்பூருக்கும் வியட்னாமுக்கும் இடையிலான 45 ஆண்டுகால அரசதந்திர உறவு மறுஉறுதி செய்யப்பட்டது. ஆசியான் நாடுகளுக்கிடையே மின்னிலக்க உள்கட்டமைப்பையும் மின்னியல் முறை வழி கட்டணம் செலுத்துதல் போன்ற சேவை களையும் மேம்படுத்த அறிவார்ந்த நகரங்கள் கட்டமைப்பு இலக்கு கொண்டுள்ளது. இது இந்த ஆண்டில் ஆசியா னுக்குத் தலைமை தாங்கும் சிங்கப்பூரின் பிரதான திட்டம்.
அறிவார்ந்த நகரங்கள் கட்டமைப்பில் இடம்பெற பத்து ஆசியான் நாடுகள் 26 நகரங் களின் பெயர்களை முன்வைத் திருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பிலான கூடுதல் விவரங்களைக் கொண்ட அறிக்கை நாளை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின் வர்த்தக ஒழுங்குமுறை, தொழில்நுட்ப உள்கட்டமைப்பு, ஆசியான் நாடுகளின் இணையப் பாதுகாப்பு மேம்பாடு ஆகியவற்றின் மூலம் ஆசியானின் மீள்திறனையும் புத்தாக்கத்தையும் வலுப்படுத்த சிங்கப்பூர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறது. 2025ஆம் ஆண்டுக்குள் ஆசியானின் மின்னிலக்கப் பொருளியல் 200 பில்லியன் அமெரிக்க டாலரை தொடும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

