துவாஸ் துறைமுகத்தின் இரண் டாம் கட்டத்திற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை கடற் துறை, துறைமுக ஆணையம் அறிவித்திருக்கிறது. நேற்று நடை பெற்ற சிங்கப்பூர் கடற்துறை தொழில்நுட்ப மாநாட்டில் அந்த அறிவிப்பு வெளிவந்தது. கடற் படுகையைத் தூர்வாறும் நிறுவ னமான பொஸ்கலிஸ், பென்டா ஓசியன் கட்டுமான நிறுவனம், ஹியூண்டாய் பொறியியல் கட்டு மான நிறுவனம் ஆகியவற்றுக்கு, $1.46 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. துவாஸ் துறைமுகத்தின் இரண்டாம் கட்டம் அமைய இருக்கும் கடற்படுகையை தூர் வாறுதல், துறைக்கான அமைப்பு களை உருவாக்குதல், 387 ஹெக்டர் நிலத்தை நிலமீட்பு செய்தல் உள்ளிட்டவை திட்டத்தில் அங்கம் வகிக்கும்.
இரண்டாம் கட்டத்துக்கான கட்டுமானப் பணிகள், பின்னொரு தேதியில் தொடங்கும். 2020ன் நடுப் பகுதிக்குள் அது கட்டி முடிக்கப்படும் என்று கடல்துறை, துறைமுக ஆணையம் தெரி வித்தது. துவாஸ் முனையத்தின் முதல் கட்டத்தில், கட்டடப் பணிகள் 70%க்கு மேல் நிறை வடைந் துள்ளதாக ஆணையம் தெரி வித்தது. துவாஸ் முனையம் மொத்தமாக கட்டி முடிக்கப் படும்போது, அது 65 மில்லியன் '20-- அடி நீள சரக்குக் கொள்கலன்' களைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும்.
சிங்கப்பூர் கடற்துறை தொழில் நுட்ப மாநாட்டில், தானியங்கிக் கப்பல்களை உருவாக்க 'கெப்பல் ஓஎன்எம்', 'டிகோம்ஸ்' ஆகிய வற்றுடன் கடற்துறை, துறைமுக ஆணையம் ஒப்பந்தத்தில் இணைந் துள்ளது. பல்வேறு துறைமுக நடவடிக்கைகளுக்கும் அந்தத் தானியங்கிக் கப்பல்கள் பயன் படும்.
ஓவியர் கைவண்ணத்தில் துவாஸ் துறைமுகம். 2021ல் கட்டங்கட்டமாகத் திறக்கப்படும் அது, 2040ல் முழுமையாகச் செயல்படும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

