மரம் மீது மோதிய கார்; போதைப் பொருள் தொடர்பில் ஓட்டுநர் கைது

மரம் மீது மோதிய கார்; போதைப் பொருள் தொடர்பில் ஓட்டுநர் கைது

1 mins read

தாம் ஓட்டிச் சென்ற கார் மரம் ஒன்றின் மீது மோதியதை அடுத்து காரிலிருந்து வெளியே வந்து தரையில் படுத்துக்கொண்ட ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் தொடர்பான குற்றத்துக்கும் ஆயுதம் வைத்திருந்ததற்கும் அந்த 27 வயது ஆடவர் கைதானார். இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு தாம்சன் சாலையை நோக்கிச் செல்லும் பாலஸ்டியர் சாலையில் நிகழ்ந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு போலிசார் விரைந்தனர். காரைச் சோதனையிட்டபோது அந்த ஆயுதம் அவர்களின் கண்ணில் பட்டது. அந்த ஆடவர் காயமடையவில்லை என்றும் விபத்து நிகழ்ந்தபோது அந்தக் காரில் அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்றும் போலிசார் தெரிவித்தனர்.2018-04-26 06:00:00 +0800