ஆமைகளைக் கடத்தியவருக்குச் சிறை

1 mins read

22 உயிருள்ள 'இந்தியன் ஸ்டார்' ஆமைகளை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற 5-0 வயது ஆடவருக்கு ஒரு மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஆமைகளை வீண் பாதிப்புக்கு உள்ளாக்கியதாக காலிட் அவாட் பமதாஜ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு ஜூன் 23ல், கார் ஒன்றுக்குள் அந்த ஆமைகள் இருந்த தகவலை, குடிநுழைவு சோதனைச்சாவடி ஆணையம், வேளாண் உணவு கால்நடை மருத்துவ ஆணையத்திடம் (ஏவிஏ) தெரிவித்தது. அனுமதியின்றி காலிட், ஏவிஏயின் அனுமதியின்றி அந்த ஆமைகளை சிங்கப்பூருக்குக் கொண்டு வரவும் அவற்றைத் தனது செல்லப்பிராணிகளாக வைத்திருக்கவும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிய வந்தது.

இதற்கிடையே, மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட சுற்றுலாப் பேருந்துக்குள் 121 பறவைகளைப் பதுக்கிச் சிங்கப்பூருக்குள் கடத்த முயன்ற மற்றோர் ஆடவருக்கு 8 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அருகி வரும் இனத்தைச் சேர்ந்த அந்தப் பறவைகள், 10 பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டனர். இதனால் பிப்ரவரி 26ல் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் பேருந்து ஓட்டுநர் 30 வயது சுட்ரக் நவும் கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட பறவைகளில் எட்டு பறவைகள் மடிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.